திருமணமாகி 15 நாளில் ஓடிய கணவர்!! 26 வயதில் சினிமா பயணத்தை முடித்த பிரபல நடிகை..

Kanaka Marriage Tamil Actress Actress
By Edward Sep 07, 2025 04:30 AM GMT
Report

நடிகை கனகா

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகையாக திகழ்ந்த நடிகை தேவிகா, இயக்குநர் ஏ. பீம்சிங்குடன் துணை இயக்குநராக வேலைபார்த்த தேவதாஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் மகள் தான் நடிகை கனகா.

திருமணமாகி 15 நாளில் ஓடிய கணவர்!! 26 வயதில் சினிமா பயணத்தை முடித்த பிரபல நடிகை.. | Husband Who Left Her At 15 Days Tamil Actress

கரக்காட்டம் மூலம் பிரபலமாகி அடுத்தடுத்த படங்களில் முக்கிய நடிகர்களுடன் ஜோடியாக நடித்து மிகப்பெரிய அந்தஸ்த்தை பெற்றார். நடிகை கனகா 16 வயதில் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் 10 ஆண்டுகள் மட்டுமே தான் அவரின் சினிமா பயணம் நிலைத்தது.

26 வயதில் நடிகர் விவேக்கிற்கு ஜோடியாக விரலுக்கேத்த வீக்கம் படத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகினார்.1980களில் டாப் இடத்தில் இருந்து வந்த கனகா, டாப் இடத்தில் இருப்பார் என்று எதிர்ப்பார்த்தனர். ஆனால் 26 வயதில் சினிமாவிற்கு பாய் சொல்லிவிட்டார்.

திருமணமாகி 15 நாளில் ஓடிய கணவர்!! 26 வயதில் சினிமா பயணத்தை முடித்த பிரபல நடிகை.. | Husband Who Left Her At 15 Days Tamil Actress

கணவர் காணாமல் போய்விட்டார்

கனகாவின் அம்மா அப்பா திருமணமாகி 3 ஆண்டுகளில் பிரிந்தநிலையில் தாய் தேவிகாவின் அரவணைப்பில் வளர்ந்தார். 2002ல் தேவிகா இறந்துபோக 2007ல் கனகா கலிஃப்போர்னியாவை சேர்ந்த இன் ஜினீயர் ஒருவரை திருமணம் செய்தார்.

ஆனால் 2010ல் கனகா பேட்டியொன்றில், திருமணம் முடிந்த 15 நாட்களில் கணவர் காணாமல் போய்விட்டார் என்றும் அவரைப்பற்றி எந்த தகவலும் இல்லை என்றும் கூறி அதிர்ச்சி கொடுத்தார்.

அதன்பின் வெளியில் தலைக்காட்டாத கனகா, உடல் எடையை ஏற்றி தனி அறையில் வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் கூட அவரது புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

திருமணமாகி 15 நாளில் ஓடிய கணவர்!! 26 வயதில் சினிமா பயணத்தை முடித்த பிரபல நடிகை.. | Husband Who Left Her At 15 Days Tamil Actress