எனக்கு விஜய்யை பிடிக்கும்!! முதல்வர் ஸ்டாலின் சொன்ன காரணம்..
தளபதி69
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் தற்போது முழு அரசியலில் ஈடுபட தயாராகி வருகிறார். தளபதி69 படத்திற்கு பின், முழு நேர அரசியலில் ஈடுபட ஆரம்பித்து சினிமாவில் இருந்து விலகுவதாகவும் கூறியிருந்தார்.
அதற்கான மாநாட்டினை சமீபத்தில் நடத்தி முடித்தார் விஜய். அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விஜய்யை பலரும் விமர்சித்து பேசி வந்தனர்.
இந்நிலையில் விஜய் பற்றி தமிழ் நாட்டின் முதலமைச்சர் மு க. ஸ்டாலின் அவர்கள் விஜய் பற்றி பேசிய பழைய வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
விஜய்யை பிடிக்கும்
ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்டாலினிடம், இளம் பெண் ஒருவர், நீங்கள் அரசியல் தலைவராக இருக்கிறீர்கள், நேரம் இருக்காது. நீங்கள் சினிமா பார்ப்பீர்களா? அப்படி பார்த்தால் எந்த சினிமா பார்ப்பீர்கள்? யாரைப் பிடிக்கும்? என்ற கேள்விகளை கேட்டுள்ளார்.
அதற்கு முதல்வர், அப்பப்ப சினிமா பார்ப்பதுண்டு, நல்ல சினிமா தரமான படம் என்றால் நிச்சயம் பார்ப்பேன். பொது சினிமாவை பற்றி சொல்லனும் என்றால், இளைஞர்களை கவரக்கூடிய வகையில் மதிப்பதில் விஜய்யை பிடிக்கும் என்று கூறியிருக்கிறார்.
இதற்கு பலரும் இப்போது அரசியல் வந்துவிட்டாரே எப்படி பிடிக்கும் என்ற கருத்துக்களை நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
Power of thalapathy Vijay @actorvijay 💥 pic.twitter.com/sQoW3DaksC
— Navanivijay (@NavaniNr47884) December 10, 2024