இட்லி கடை - காந்தாரா சாப்டர் 1 இதுவரை செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் விவரம்
கடந்த வாரம் வெளிவந்த இரண்டு மிகப்பெரிய திரைப்படங்கள் இட்லி கடை மற்றும் காந்தாரா சாப்டர் 1. இந்த இரண்டு திரைப்படங்களும் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்துதான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
காந்தாரா
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளிவந்த காந்தாரா படம் முதல் நாளில் இருந்தே உலகளவில் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இப்படம் அக்டோபர் 2ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இதுவரை 9 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் இப்படம் உலகளவில் ரூ. 535 கோடி வசூல் செய்துள்ளது.
இட்லி கடை
முன்னணி நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவான நான்காவது படம் இட்லி கடை. யதார்த்தமான கதைக்களத்தில் உருவான இப்படம் அக்டோபர் 1ஆம் தேதி வெளிவந்தது. 10 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் இப்படம் உலகளவில் ரூ. 62 கோடி வசூல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் ரூ. 49 கோடி வசூல் செய்துள்ளது.
இதுதான் இந்த இரண்டு திரைப்படங்களின் இதுவரையிலான வசூல் விவரமாகும். இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.