விஜய் ஜெயித்தால் இதெல்லாம் ப்ரீ, மலையாள ரசிகர் ஒருவர் சொன்ன ஷாக் தகவல்
விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்த நடிகர். இவர் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்தே போதே, இனி நடிக்க மாட்டேன் என கூறிவிட்டு, தீவிர அரசியலில் இறங்கினார்.
இதை தொடர்ந்து அவர் சொன்னது போலவே ஜனநாயகன் படத்துடன் நடிப்பதை நிறுத்திவிட்டு, தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார். அவர் சென்ற இடமெல்லாம் கடல் போல் மக்கள் அவரை சூழ்ந்தனர், தற்போது தேர்தலும் முடிந்து விட்டது.

இந்த தேர்தல் முடிந்து எல்லோரும் விஜய் மிகப்பெரிய தாக்கத்தை தமிழகத்தில் ஏற்படுத்துவார் என கூறி வந்த நிலையில், கேரளாவை சார்ந்த ஒரு லாட்டரி வியாபாரி ஒரு ஷாக் தகவலை கூறியுள்ளார்.
அதாவது விஜய் இந்த தேர்தலில் வெற்றிபெற்றா, தமிழகத்திலிருந்து வரும் ஒவ்வொருவருக்கும் ஒரு லாட்டரி இலவசமாக கொடுப்பேன் என அவர் கூறியுள்ளார். இந்த செய்தியை பார்த்த எல்லோரும், தமிழகம் தாண்டி கேரளாவிலும் தளபதிக்கு செம மாஸ் எதிர்ப்பார்ப்பு உள்ளது என பேசி வருகின்றனர்.