அந்த படமா முடியவே முடியாது? தலைக்கனத்தில் இயக்குனரை நம்பி ஏமாற்றிய இளையராஜா
தமிழ் சினிமாவில் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து பின் சினிமா மீது இருந்த மோகத்தில் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் ஞான ராஜசேகரன். குறும்படத்தை இயக்கியபின் மோகமுள் என்ற படத்தின் இயக்கு மிகப்பெரிய வெற்றி கொடுத்தார். 175 நாட்கள் ஓட முக்கிய காரணமாக அமைந்தது அப்படத்தின் இசை.
ஞான ராஜசேகரின் முதல் படத்திலேயே இளையராஜாவின் இசையை அள்ளியவர். அப்படத்திற்கு பின் முகம், பாரதி போன்ற படங்களை இயக்கியும் இருந்தார். அந்த படங்களுக்கும் இளையராஜா தான் இசையமைத்திருந்தார். பாரதி படத்தில் நிற்ப்துவே நடப்பதுவே என்ற பாடல் இன்று வரை பாரதியை புகழப்படும் பாடலாக அமைந்து வருகிறது.
இப்படத்திற்காக தேசிய விருதுகளும் கிடைத்தது. இதனை அடுத்து இளையராஜாவை ஒரு முறை சந்தித்த ஞான ராஜசேகரன், அடுத்த கதை பெரியாரை பற்றி எடுக்கவுள்ளேன் என்று கூறியுள்ளார். அதற்கு இளையராஜா, நீங்கள் காசு தரப்போகிறீர்கள் நான் இசையமைக்கப்போகிறேன், என்று படத்தினை ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார்.
அதன்பின் தயாரிப்பாளரும் கிடைத்து விட இளையராஜாவை நானும், எடிட்டரும் பார்க்க சென்றிருந்தோம். அப்போது இளையராஜா, பெரியார் பற்றிய படத்தினை நான் எப்படி இசையமைக்க முடியும். அவர் கடவுள் இல்லை என்று கூறுகிறவர். என்னுடைய நாவில் சரஸ்வதி இருக்கின்றார்.
கடவுள் இருக்கு என்று நம்புகிறவன், எப்படி இசையமைக்க முடியும் என்று இளையராஜா கூறியுள்ளார். அப்படி அவர் கூறியது அவரது தனிப்பட்ட முடிவு. அதற்கு நான் ஒன்றும் கூற முடியாது என்று அங்கிருந்து கிளம்பி, வித்யாசாகரிடம் கேட்டு படத்தின் இசையை பெற்றேன்.
அப்படமும் தேசிய விருதினை வாங்கியுள்ளது. இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இளையராஜாவும் சமீபத்தில் எம்பி பதவியை கொடுத்ததை அடுத்து அவர் பற்றிய தகவல்களும் ஆணவத்தில் செய்யும் செயல்களும் பரவி வருகிறது.