ஆணவத்தில் எஸ்பிபி, ஏஆர் ரகுமானுக்கு கொடுக்காத வாய்ப்பு! இதுக்கு மட்டும் இளையராஜா எப்படி சம்மதித்தார்?

arrahman spb ilaiyaraaja devisriprasad liveconcert
By Edward Mar 17, 2022 07:36 AM GMT
Report

தமிழ் சினிமாவின் இசை அரசனாகவும் இசைஞானியாகவும் திகழ்ந்து வருபவர் இளையராஜா. 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடலும், 1400 படங்களுக்கு மேலான படங்களுக்கும் இசையமைத்தவர். உள்நாடு வெளிநாடு என பல பாடல் கச்சேரிகளை நடத்தி வந்தார்.

இப்படி பல விஷயங்கள் புகழ்ந்து பேசினாலும் இளையராஜாவிற்கு இருக்கும் தலைக்கனமும் ஆணவமும் அழியாது என்று பலர் கூறக்கேட்டு இருப்போம். இதற்கு காரணம் பல இயக்குனர்களையும் பாடகர்களையும் தன்னுடைய குணத்தால் மதிப்பை இழந்து வந்தார் என்பது தான் உண்மை.

அப்படி எஸ்பிபி, சங்கர், வைரமுத்து, கங்கை அமரன், ஏ ஆர் ரகுமான் போன்ற முன்னணி லெஜெண்ட் நட்சத்திரங்களுடன் வாக்குவாதம் வழக்கு என சர்ச்சையையும் ஏற்படுத்தினார். தன்னுடைய பாடலை ராயல்டி இல்லாமல் பாடி வந்தது தான் அதற்கு காரணம்.

இந்நிலையில், இதுவரையில் இளையராஜா தான் நடத்தி வந்த கச்சேரியில் மட்டும் தான் பாடலை பாடி வந்துள்ளார். ஏ ஆர் ரகுமான் கச்சேரியில் கூட பங்கேற்காத இளையராஜா, தற்போது பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் நடத்தும் ஒரு கச்சேரியில் இளையராஜா முதன்முதலில் பாடவிருக்கிறார்.

இதனை தேவி பிரசாத பெருமையுடன் இணையத்தில் தெரிவித்ததற்கு இளையராஜா மேடையில் சந்திப்போம் என்று பதிலளித்துள்ளார்.