எஸ்பிபியை போல் தம்பியை அவமானப்படுத்திய இளையராஜா? 13 ஆண்டுகளுக்கு பின் காலில் விழவைத்தாரா!
தமிழ் சினிமாவின் இசைஞானியாக பல்லாயிரக்கணக்கான பாடலுக்கு சொந்தக்காரராக இருப்பவர் இளையராஜா. எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அதற்கென பாடலை கேட்டு மனநிலையை மாற்றும் திறன் இசைஞானியின் பாடல்களுக்கு இருக்கிறது. அப்படி இருக்கையில் தன்னுடைய ஆணவத்தால் பல நட்சத்திரங்களை பகைத்துக் கொண்டார் இளையராஜா.
தன் இசையை அவரது அனுமதி இல்லாமல் யாரும் பாடக்கூடாது என்பதில் கவனம் செலுத்துபவர் இசைஞானி. அப்படி மறைந்த பாடகர் எஸ்பிபி அவர்கள் இளையராஜா அனுமதியில்லாமல் ராயல்டி கொடுக்காமல் பாடியதாக புகாரளித்தார். இந்த பிரச்சனை பல ஆண்டுகளாக இருவருக்கும் சென்றது. எஸ்பிபியை போலவே இளையராஜாவின் தம்பி கங்கை அமரனும் இதுபோல் இளையராஜாவால் சங்கடத்தை சந்தித்துள்ளார்.
ராயல்டி கொடுத்துவிட்டு பாட வேண்டும் என்று கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை என்று கங்கை அமரன் கூற இது பெரிய பிரச்சனையாகி பார்க்கக்கூட முடியாத சூழலை இருவருக்கும் உருவாக்கியது. கடந்த 13 ஆண்டுகளாக அண்ணன் தம்பி இருவரும் பார்த்துக்கொள்ளாமல் பேசிக்கொள்ளாமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில் கங்கை அமரனை சந்திக்க இளையராஜா கால் செய்து கூப்பிட்டு சந்தித்து பேசியுள்ளார். இனிமேல் இப்படி இருக்க வேண்டாம். உன்னை சந்தித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கங்கை அமரனை பார்த்து வாழ்த்தி பேசியிருக்கிறார் இளையராஜா.
