நான் கர்வத்தோடுதான் பேசுறேன்..அடித்து ஆடும் இசைஞானியின் டாக்....

Keerthy Suresh Ilayaraaja Karthik Subbaraj
By Jai Sep 09, 2026 11:00 AM GMT
Report

கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் டோரதி. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்களும், இசையும் அனைவரிடமும் பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில் டோரதி படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.

நான் கர்வத்தோடுதான் பேசுறேன்..அடித்து ஆடும் இசைஞானியின் டாக்.... | Ilaiyaraaja S Bold Speech At Dorothy

நிகழ்ச்சியின் கதாநாயகன் இளையராஜா பேசியது தற்போது இணையத்தில் பகிரப்பட்டு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இசைஞானி

அதில், எல்லோரும் இசையில் பயிற்சி பெற்றவர்கள், எனக்கு எவன் பயிற்சி கொடுத்தான். நான் பொட்டல் காட்டில் இருந்து, கல்லும் முள்ளும் குத்த அங்கிருந்து வந்தேன். இன்னும் எனக்கு இசை என்றால் என்னவென்று தெரியாது, அது சத்தியம். அதனால்தான் இன்னும் இசையமைத்துக் கொண்டிருக்கிறேன்.

நான் கர்வத்தோடுதான் பேசுறேன்..அடித்து ஆடும் இசைஞானியின் டாக்.... | Ilaiyaraaja S Bold Speech At Dorothy

அதன்மூலம் தான் நான் இசையை தேடிக் கொண்டிருக்கிறேன். என் இசைதான் மற்றவர்களுக்கு அறிவை கொடுக்கிறது. என் இசையை மற்ற இசையமைப்பாளர்கள் ரெஃபரன்ஸுக்காக வைத்திருக்கிறார்கள். என் இசை மாதிரி வேறு யாருடைய இசையும் இல்லை. இந்த உலகத்தில் எல்லாம் விரல் நுனியில் இருக்கிறது.

இந்த இசை மாதிரி இருக்கிறதா? கர்வத்தோடு சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம், நான் கர்வத்தோடுதான் சொல்கிறேன், ஏனென்றால் இது மாதிரி இன்னொன்று இல்லைதானே, அதனால் தான் அப்படி சொல்கிறேன்.