விக்ரம் படத்தின் ஒப்பாரி காட்சில இளையராஜா இசையா? சைலண்ட்டாக வேலையை காமித்த அனிருத்..
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத்பாசில், சூர்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து ஜூன் 3 ஆம் தேதி உலகளவில் வெளியாகி சுமார் கிட்டத்தட்ட ரூ. 500 அளவில் வசூலை பெற்றுள்ளது. ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியாகி அதற்கான தொகையையும் ராஜ் கமல் நிறுவனம் பெற்றுள்ளது.
படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு ஒரு காரணம் அனிருத்தின் இசை தான். பின்னணி இசையில் அப்படியொரு எனர்ஜியை படத்திற்கு கொடுத்துள்ளார் அனிருத். அப்படியிருக்கையில் அனிருத் இளையராஜாவின் இசையையும் சில காட்சியில் பயன்படுத்தியிருப்பது அனைவருக்கும் ஆச்சரியமாக உள்ளது.
அது எந்த காட்சி என்றால், விக்ரமின் மகன் பிரபஞ்சன்(காளிதாஸ்) இறந்து உடலை வீட்டில் வைக்கப்பட்டு இருக்கும். அப்போது உறவினர்கள் உடலை சுற்றி அழுதுக்கொண்டிருக்கும் போது பிரபஞ்சனின் குழந்தை அழுவதை பார்த்து அமைதியாக இருக்க செடியை போட்டு உடைப்பார்.
இறந்த மகனின் சோகத்தை மறைத்து பேரனின் அழுகையை சமாதானப்படுத்துவார் விக்ரம். அப்போது அந்த காட்சி உணர்வுபூர்வமாக இருக்கும் படி இயக்குனர் லோகேஷ் படத்தில் காட்டியிருப்பார். அதில் இசைஞானி இளையராஜாவின் இசையை அனிருத் பயன்படுத்தி இருப்பார்.
மேலும் பழைய விக்ரம் படத்தின் தீம் மியூசிக்கையும் கைதி படத்தின் மியூசிக்கையும் அமைதியாக இடம் பெற வைத்திருக்கிறார் அனிருத். இப்படி பல இடங்களில் சைலண்ட்டாக அனிருத் வேலையை செய்திருக்கிறார்.
சில இடங்களில் சொதப்பியதால் தான் சிலர் இதற்கு இளையராஜாவை பயன்படுத்தி இருக்கலாம் என்றும் கூறி வருகிறார்கள்.