ரோஹித் ஒன்னும் GOAT கிடையாது!! கடுமையாக விளாசிய முன்னாள் வீரர்..
ரோஹித் சர்மா
இந்திய கிரிக்கெட் அணியினர் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியை ஆடி வருகிறார்கள். இந்த போட்டியில் ரோஹித் சர்மா விலகி ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக களமிறங்கியுள்ளார்.
ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருந்தாலும் பிளேயிங் லெவனில் இடம் பெறாமல் போனது பேசுபொருளாக மாறியிருக்கிறது. ஆனால் ரோஹித் சர்மா தாமான முன்வந்து ஓய்வெடுத்ததாக பும்ரா முன்னரே கூறியிருந்தார்.
சஞ்சய் மஞ்ச்ரேக்கர்
இதுகுறித்து முன்னாள் இந்திய விரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சித்து பேசியிருக்கிறார். அதில், ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதை ஏன் ஏதோ சீக்ரெட் ஆப்ரேஷன் போல் மறைக்கிறார்கள் என்று தெரியவில்லை.
இதுதான் இந்திய கிரிக்கெட் கலாச்சாரத்தில் எனக்கு பிடிக்காத விஷயம். பிளேயிங் லெவனில் இருந்து ரோஹித் நீக்கப்பட்டதை மறைக்கும் அளவிற்கு அவர் ஆல் டைம் கிரேட் பேட்ஸ்மேன் இல்லை. ஒருவேளை கோலிக்கு இப்படி செய்திருந்தால் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆனால் 60 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய ரோஹித், SENA நாடுகளில் ஒரு சதம் தான் அடித்திருக்கிறார். அவரது சராசரி வெறும் 40 மட்டும் என்பதால் ரோஹித் சர்மா நீக்கப்பட்டதை இந்திய அணி மறைக்க வேண்டிய தேவையில்லை என்று கூறியிருக்கிறார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.