மகா ராணியாக வாழும் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா... சொத்து மதிப்பு..
ஸ்மிருதி மந்தனா
இந்திய பெண் கிரிக்கெட் அணியில் சிறப்பாக விளையாடி வருபவர் தான் ஸ்மிருதி மந்தனா. பல சாதனைகளை படைத்து வரும் ஸ்மிருதி மந்தனா பற்றிய பல விஷயங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
95 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய ஸ்மிருதி, 4 ஆயிரம் ரன்களும், 145 டி20யில் 3761 ரன்களும், 7 டெஸ்ட் போட்டிகளில் 629 ரன்களும் எடுத்துள்ளார். ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் அழகில் இருக்கும் ஸ்மிருதி மந்தனாவுக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.
சொத்து மதிப்பு
விளையாட்டிலும் சரி வருமானம் ஈட்டுவதிலும் சரி, மிகப்பெரிய ஆர்வத்தை காட்டி கில்லாடியாக திகழ்ந்து வருகிறார்.
அவரிடம் ரூ.33 கோடி சொத்து மதிப்பு இருப்பதாகவும் கிரிக்கெட் மற்றும் பெரிய பிராண்டுகளுக்கான விளம்பர ஒப்பந்தங்கள் வாயிலாக வருமானத்தை ஈட்டி இருவருகிறார்.
ஹீரோ மோட்டோகார்ப், ஹூண்டாய், கார்னியர், ரெட் புல், மாஸ்டர்கார்ட், ஸ்பெக்ட்ராக்காம் உள்ளிட்ட முன்னணி பிராண்ட்களை விளம்பரம் செய்து வருகிறார். ஒரு விளம்பரத்திற்கு 40 முதல் 1 கோடி வரை சம்பளமாக பெற்று வருகிறாராம் ஸ்மிருதி மந்தனா.