லிப் லாக் சீனுக்கு பலூனில் பிராக்டீஸ்!! காய்ச்சலில் தவித்த நடிகை ஆஷா கெளடா..
சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமாகி திரைப்படங்களில் கதாநாயகிகளாக அறிமுகமாகி ஒரு நல்ல இடத்தினை பிடித்தவர்கள் பலர். அப்படி கோகுலத்தில் சீதை, ராஜா ராணி 2 போன்ற சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை ஆஷா கெளடா. கடைசியாக சந்தியா ரோலில் நடித்து அனைவரையும் ஈர்த்து வந்த ஆஷா கெளடா, தற்போது வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.
இயக்குனர் ஜிவி பெருமால் வரதன் இயக்கத்தில் நடிகர் சுரேஷ் ரவி நடிப்பில் உருவாகியுள்ள நந்தி வர்மா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார் நடிகை ஆஷா கெளடா. டிசம்பர் 29ல் வெளியாகவுள்ள நந்தி வர்மா படத்தின் பிரமோஷனுக்காக ஆஷா கெளடா பேட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.
சமீபத்தில் அளித்த பேட்டியில், ரொமான்ஸ் சீன் எப்படி இருந்தது என்ற கேள்விக்கு, ரொமான்ஸ் இருக்கு என்று தெரிவித்துள்ளார். அதற்கு படத்தின் கதாநாயகன் சுரேஷ் ரவி, லிப் லாக் சீன் இருக்கு ஆனால் படத்தில் வருகிறதா என்பது இயக்குனருக்கு தான் தெரியும்.
மேலும், லிப்லாக் சீனில் பயத்தில் ஆஷா கெளடாவுக்கு காய்ச்சல் வந்துவிட்டது. அதனால் பலூன் ஊதி பிராக்டீஸ் செய்தோம் என்றும் இது வெறும் ஆக்டிங் தான் என்று புரிய வைத்தோம். ரூமில் இந்த சீன் எடுத்த போது வெளியில் இருந்தவர்கள் எல்லோரும் உள்ளே வந்துவிட்டார்கள் என்றும் சுரேஷ் ரவி தெரிவித்துள்ளார்.
இதற்கு ஆஷா கெளடா வெட்கத்தில் சிரித்திருக்கிறார். மேலும், புதிதாக சினிமாவில் நடிக்கும் போது பல கஷ்டங்களை சந்தித்தேன். தமிழ் தெரியாது, அது ஒரு பிரச்சனையாக இருந்தது. மொழியை வைத்து கலாய்த்திருக்கிறார்கள், தினமும் ஏதாவது ஒரு விசயத்தை சொல்லி கலாய்பார்கள் என்று கூறியிருக்கிறார் ஆஷா கெளடா.