அதிக சம்பளம் வாங்கும் வீரர்..36 வயதான விராட் கோலியின் சொத்து இத்தனை கோடியா?
விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்து தற்போது அணி வீரராக விளையாடி வருகிறார் விராட் கோலி. சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டித்தொடரில் சரியாக விளையாடாமல் விமர்சனத்திற்குள்ளாகினார்.
இன்றுடன் விரா கோலி 36 வயதை எட்டியிருக்கிறார். அவரின் பிறந்தநாளுக்கு பலரும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் விராட் கோலியின் சம்பளம் மற்றும் சொத்து மதிப்பு என்ன என்ற தகவல் வெளியாகியுள்ளது. உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் கிரிக்கெட் பிளேயர்களில் விராட் கோலி நம்பர் 1 இடத்தில் இருக்கிறார்.
சொத்து மதிப்பு
ஒரு ஆண்டுக்கு பிசிசிஐ 7 கோடியும் ஆர்சிபி அணியினர் ஒரு ஆண்டுக்கு 15 கோடி சம்பளமாகவும் கொடுத்து வருகிறதாம்.
அப்படி கிரிக்கெட், விளம்பரம், பிராண்ட் அம்பேஸ்டர் என்று சம்பாதித்து வைத்துள்ள சொத்து மதிப்பு 1050 கோடிக்கும் மேல் என்று கூறப்படுகிறது.
மேலும் இன்ஸ்டாகிம்ரா பக்கத்தில் 271 மில்லியன் பாலோவர்களை கொண்டு ஒரு பதிவுக்கு 11.45 கோடி வரை சம்பளமாக பெறுகிறாராம்.
மும்பையில் 34 கோடி மதிப்பில் மேன்ஷன் வீடும், டெல்லி குருகிரம் இடத்தில் 80 கோடி மதிப்பிலான ஆடம்பர வீடும் வைத்துள்ளார். மேலும், மும்பை Alibaug இடத்தில் ஃபார்ம் அவுஸும் இருக்கிறதாம்.