முக்கியமான இடத்தில் காற்று வாங்கும் ஜெயிலர் 2 முன்பதிவு

Rajinikanth Box office Jailer 2
By Tony Oct 12, 2026 12:30 PM GMT
Report

ஜெயிலர் படம் உலகம் முழுவதும் 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்த படம். இப்படத்தின் இரண்டாம் பாகம் என அறிவித்த போது கண்டிப்பாக இந்த படம் ரூ. 1000 கோடிகளை தாண்டும் என எல்லோரும் சொன்னார்கள்.

ஆனால், படம் இப்போது ரிலிஸ் நெருங்க பல இடங்களில் முன்பதிவு டல் ஆகி வருகிறது, இதுக்குறித்து நம் தளத்தில் ஏற்கனவே கூறியிருந்தோம்.

முக்கியமான இடத்தில் காற்று வாங்கும் ஜெயிலர் 2 முன்பதிவு | Jailer 2 Pre Booking In Dull

இந்த நிலையில் சென்னை எப்போதும் ரஜினியின் டாப் இடமாக இருந்து வரும் இடம், ஆனால், அங்கே மிக முக்கியமான மல்டிப்ளக்‌ஷ் ஆக கருதப்படுவது மாயாஜால் தான், இந்த மாஜாஜாலில் முதல் நாள் பெரிய நடிகர்கள் படங்கள் என்றால் சுமார் 80 ஷோக்களுக்கு மேல் போடுவார்கள் அதுவும் ஹவுஸ்புல் ஆகும்.

ஆனால் ஜெயிலர் 2 இத்தனை ஷோக்கள் போட்டு 10-15 ஷோக்களே தற்போது வரை புல் ஆகியுள்ளது. இதை கண்ட எல்லோரும் ஏன் ரஜினி படத்துக்கு என்னாச்சு, இப்படி புக்கிங் மந்தமாக உள்ளதே என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.