மலேசியாவில் தளபதி திருவிழா!! டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா!! கோடிகளில் புரளும் ஜனநாயகன்..
ஜனநாயகன் படம்
இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படம் 2026 ஜனவரி 9 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இப்படத்தின் ஆடியோ லான்ச் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி மலேசியாவிலுள்ள தலைநகர் கோலாலம்பூர் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தளபதி திருவிழாவிற்கு ஒரு லட்சம் பேர் வரைக்கும் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டு வரும் நிலையில், இசை வெளியீட்டிற்காக பல நடிகர்கள், நடிகைகள், இசைக்கலைஞர்கள், பாடகர்கள் என பலரும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு வருகிறார்கள்.
மலேசியா
இசை வெளியீட்டு விழாவின் டிக்கெட் விலை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் லெவல் 1 இருக்கைக்கு, இந்திய மதிப்பில் ரூ. 6,443.48 கட்டணமாக வசூலிக்கப்படுகிறதாம்.

அதேபோல், லெவல் 2 இருக்கைக்கு ரூ. 4,291.40 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதேபோல் 3வது லெவல் இருக்கைக்கு ரூ. 2,135.42 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம். மேலும் 2 ஆயிரம் ரூபாய் முதல் 14 ஆயிரம் வரையிலான டிக்கெட்டுகள் விற்பனைக்கு உள்ளதாம்.
இது தொடர்பான தகவல்கள் வெளியான நிலையில் மொத்தம் 85 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறதாம். இதன்மூலம் மலேசிய உரிமையை பெற்ற நிறுவனத்திற்கு சுமார் ரூ. 40 கோடி வருவாய் கிடைக்கும் என்றும் பல கோடி லாபமும் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.