காசு கொடுத்து என்னை அப்படி செய்கிறார்கள்!! நடிகை பூஜா ஹெக்டே ஆதங்கம்..
பூஜா ஹெக்டே
தெலுங்கு சினிமாவை தாண்டி தற்போது இந்தி, தமிழ் மொழிப்படங்களில் கவனம் செலுத்தி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. தற்போது தமிழில் விஜய்யின் ஜனநாயகன், சூர்யாவின் ரெட்ரோ போன்ற படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் ரெட்ரோ படத்தின் கனிமா என்ற பாடலில் க்யூட்டான ரியாக்ஷன் கொடுத்து ஆட்டம் போட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சமீபத்தில் ஃபிலிம்பேர் விருது விழாவில் அளித்த பேட்டியில், தன்னைப்பற்றி வரும் ட்ரோல்கள், நெகட்டிவ் கருத்துக்கள் பற்றி பகிர்ந்துள்ளார்.
காசு கொடுத்து
அதில், ட்ரோல்களை பார்க்கும் போது பல நேரங்களில் அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பி ஆர் விஷயத்தில் நான் மிகவும் மோசமாக இருக்கிறேன். மீம் பக்கங்கள் என்னை தொடர்ந்து ட்ரோல் செய்த ஒரு காலம் இருந்தது.
அவர்கள் ஏன் என்னைப்பற்றி தொடர் நெகட்டிவிட்டி பரப்புகிறார்கள் என்று நான் யோசித்தேன். அதுவும் என்னை சரியாக டார்க்கெட் செய்து ட்ரோல் செய்வதை நான் உணர்ந்தேன்.
மற்றவர்களை குறைத்து மதிப்பிட ஒரு கும்பல் அதிக பணம் செலவு செய்கிறார்கள் என்று பின் எனக்கு புரிந்தது. அதை நான் அறிந்தபோது என் பெற்றோரும் நானும் மிகவும் வருத்தப்பட்டோம்.
ஆனால் நான் அதை ஒரு பெருமையாக எடுத்துக்கொண்டேன். ஏனென்றால் யாராவது உங்களை குறைத்து மதிப்பிட விரும்பினால், நீங்கள் அவர்களைவிட உயர்ந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
ஒன்றும் பிரச்சனை இல்லை என்று நான் என் பெற்றோரை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தேன். ஆனால் ஒரு கட்டத்திற்கு பின் அது அதிகமாக இருந்தது. என்னை ட்ரோல் செய்ய சிலர் லட்சக்கணக்கில் செலவிடுவதை நான் கண்டுப்பிடித்தேன் என்று பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.