தெலுங்கு பட ரீமேக் ஜனநாயகன்.. அதை அவர்களுக்கே பெரிய தொகைக்கு விற்கும் தயாரிப்பாளர்
JanaNayagan
By Parthiban A
விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் பல்வேறு தடைகளுக்கு பிறகு விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அந்த படம் தெலுங்கில் வரவேற்பை பெற்ற பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் தான் என்பதும் எல்லோருக்கு தெரியும்.
விஜய் முதலமைச்சர் ஆகிவிட்ட நிலையில் தற்போது ஜனநாயகன் படத்துக்கு மவுசு கூடி இருக்கிறது. தேர்தலுக்கு முன் அந்த படத்தை வாங்க யாரும் முன்வராத நிலையில் தற்போது விஜய் முதலமைச்சர் ஆகிவிட்ட பிறகு வியாபாரம் சூடு பிடித்து இருக்கிறது.

தெலுங்கு ரிலீஸ் உரிமை
தெலுங்கு பட ரீமேக் என்றாலும் ஜனநாயகன் பட தெலுங்கு ரிலீஸ் உரிமையை 35 கோடி ரூபாய்க்கு வியாபாரம் பேசி வருகிறாராம் தயாரிப்பாளர்.
ஆனால் 15 கோடி மட்டுமே தர முடியும் என தெலுங்கு விநியோகஸ்தர்கள் தெரிவித்து விட்டார்களாம். அதனால் அதிகபட்சமாக 20 கோடி வரை மட்டுமே ஜனநாயகன் அங்கே விலை போக வாய்ப்பிருக்கிறது.
