சூர்யா-ஜோதிகா காதல் விவகாரம்! கார்த்திக்கு ஜெயலலிதா கொடுத்த அட்வைஸ்...

jayalalitha suriya sivakumar jyothika karthi tamilcinema lovemarriage nadigarsangam
4 மாதங்கள் முன்
Edward

Edward

தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக திகழ்ந்து வருபவர் சிவகுமார். தற்போது தன் இரு மகன்கள் சூர்யா, கார்த்தியை சினிமாவில் அறிமுகப்படுத்தி நல்ல இடத்தை பெற்றுக்கொண்டனர். சூர்யா ஜோதிகா காதல் திருமணம் செய்தாலும் கார்த்தி குடும்பம் பார்த்த பெண்ணை திருமணம் செய்தார்.

இதுகுறித்து சில வருடங்களுக்கு முன் நடிகர் சங்கம் மீட்டிங்கின் போது ஜெயலலிதா பற்றிய விஷயம் ஒன்றினை பகிர்ந்துள்ளார். என் பொண்ணு திருமணத்திற்காக அழைப்பு விடுக்க மறைந்த ஜெயலலிதா அம்மாவை பார்க்க சென்றேன்.

உங்க திருமணத்திற்கு வரவில்லை நான் வருகிறேன் என்று கூறியதுடன் காலை 4.50 மணிக்கே வந்து சேர்ந்தார். பின் சூர்யா ஜோதிகாவை காதலித்து இருந்தார். நானும் அதற்கு ஒப்புக்கொண்டு திருமணத்தை முடித்து வைக்க ஆரம்பித்து பத்திரிக்கை கொடுக்க ஜெயலலிதாவை பார்க்க நான் கார்த்தி, என் மனைவி சென்றோம்.

அப்போது சூர்யா காதல் திருமணம் செய்கிறார், கார்த்தி நீயாவது அப்பா அம்மா பேச்சை கேட்டு அவர்களுக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்துகொள் என்று அறிவுரை கூறினார். பின் அதேபோல் கார்த்தியும் திருமணம் செய்து கொண்டான் என்று உண்மையை போல்ட்டாக கூறியுள்ளார் சிவகுமார்.

வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்க..

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.