திருமணமாகி 2 வருஷம்கூட ஆகல!! 4வது கணவரையும் விவாகரத்து செய்த பிரபல நடிகை..
ஜெனிஃபர் லோபஸ்
ஹாலிவுட் நடிகையாக முன்னணி இயக்குனர்கள் படங்களில் நடித்தும் பாடகியாக மிகப்பெரிய இடத்தினை பிடித்தவர் நடிகை ஜெனிஃபர் லோபஸ்.
1997ம் ஆண்டு ஒஜானி நோஹா என்பவரை திருமணம் செய்த ஜெனிஃபர் லோபஸ், ஒரு வருடம் கூட சேர்ந்து வாழாமல் விவாகரத்து பெற்றார்.பின், கிறிஸ் ஜூட் என்பவரை 2001ல் திருமணம் செய்து கொண்டு 2003ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தார்.
4வது விவாகரத்து
அடுத்து மார்க் ஆண்டனி என்பவரை 2004ம் ஆண்டு திருமணம் செய்து 2014ம் ஆண்டு வரை சுமார் 10 ஆண்டுகள் வாழ்ந்து விட்டு பிரிந்தார். அடுத்ததாக 2022ம் ஆண்டு பேட்மேன் படநடிகர் பென் அஃப்லெக்கை 52 வயதில் திருமணம் செய்தார்.
கடந்த ஆண்டுதான் இருவரும் இஷா அம்பானியின் 12 பெட்ரூம்கள் கொண்ட பிரம்மாண்ட வீட்டை 500 கோடிக்கு வாங்கினார்கள். தற்போது நான்காம் கணவர் பென் அஃப்லேக்-ஐ விவாகரத்து செய்ய கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருக்கிறார் ஜெனிஃபர் லோபஸ். இந்த செய்தி தற்போது ஹாலிவுட் சினிமாவையே அதிரவைத்திருக்கிறது.