வாங்கிய கடனை திருப்பிக்கொடுக்காத மகள்..ரவுடிகள் அட்டூழியம்!! ரஜினிகாந்த் செய்த செயல்..
ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தன்னுடைய 75வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். ரஜினிகாந்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக படையப்பா படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரஜினிகாந்த் பற்றி பலரும் பேட்டிகளில் பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார்கள்.
அந்தவகையில் பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன், யூடியூப் சேனலில் ஒருசில விஷயத்தை கூறியிருக்கிறார். படையப்பா படம் இன்று ரீ-ரிலீஸாகியிருக்கிறது. ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கிறது என்று தேனப்பனிடம் கேட்டபோது, அவர் ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறார்.

அதுமட்டுமின்றி ரஜினி சாரும் ஹேப்பியாக இருக்கிறார். காலை ஃபோன் செய்து படையப்பா ரீ-ரிலீஸுக்கு ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கிறது என்று ரஜினி சார் கேட்டார். அதிரி புதி ரெஸ்பான்ஸ் என்று சொன்னேன் என்று என்னிடம் தேனப்பன் தெரிவித்தார்.
இளைய மகள்
மேலும் ரஜினியின் இளைய மகள் 'சுல்தான் தி வாரியர்' என்ற படத்தை எடுப்பதற்காக ஒரு பைனான்ஸியரிடம் கடன் வாங்கினார். ஆனால் கடனை வாங்கிவிட்டு தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டார். கடன் கொடுத்தவர் ஃபோன் செய்தாலும் எடுக்கவில்லை. அப்போது திமுக ஆட்சி, கருணாநிதி தான் முதலமைச்சர்.
அந்த சமயத்தில் உச்சத்தில் இருந்த ஒரு சேனலில் உச்சத்தில் இருந்த அதிகாரியின் உதவியை செளந்தர்யாவுக்கு கடன் கொடுத்தவர் நாடினார். அந்த உயர் அதிகாரி பெரிய செல்வாக்கில் இருந்தவர். கருணாநிதி அவரை பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை.

அந்த அதிகாரியும் அவருடன் இருந்த ஒருவரும் அட்களை அனுப்பி செளந்தர்யா அலுவலகத்திலிருந்த பொருட்களை எல்லாம் அடித்து நாசம் செய்துவிட்டனர். இது ரஜினிக்கு பெரிய ஷாக். நம் மகளுக்கே இப்படியொரு நிலைமையா என்று நொந்துவிட்டார். வெளியே செல்லவும் முடியாத நிலையில் அமைதியாக அதை கடந்துவிட்டார்.
ஜெயலலிதா
நிலைமை இப்படியிருக்க திமுக ஆட்சி மறைந்து அதிமுக ஆட்சி வந்தது. முதலமைச்சரான ஜெயலலிதாவை நேரில் சந்தித்து ரஜினி வாழ்த்து தெரிவித்தபோது, இந்த விவகாரம் பற்றி சொன்னார். உடனே ஜெயலலிதா அந்த உயர் அதிகாரி உள்ளிட்டோரை கைது செய்து ஸ்டேஷனில் உள்ளாடையுடன் அமரவைத்தார்.
இதற்கு காரணம் ரஜினிதான். அதனால் தான் ஜெயலலிதாவுடன் மோதலில் இருந்த ரஜினி ஒருக்கட்டத்தில் அவரை தைரிய லட்சுமி என்று புகழ்ந்தார் என்று அந்தணன் தெரிவித்துள்ளார்.