கூச்சப்படாம எம்பி பதவியை ஏத்துகிட்ட இளையராஜா! கேவளமாக நெறியாளரை திட்டிய பாஜகவினர்

Ilayaraaja
By Edward Jul 14, 2022 09:34 AM GMT
Report

இந்திய சினிமாவில் சிறந்த இசையமைப்பாளராக திகழ்ந்து வரும் இசைஞானி இளையராஜா சமீபத்தில் மத்திய அரசால் கவுரவிக்கும் வகையில் எம்பி பதவியை கொடுத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன், பிரதமர் நரேந்திர மோடியை அம்பேத்கருக்கும் நிகராக புகழ்ந்து புத்தகம் ஒன்றில் முன்னுரை பகுதியில் எழுதியிருந்தார்.

இதற்கு தமிழகத்தில் பலர் எதிர்த்தும் புகழ்ந்தும் கருத்துக்களை கொடுத்து வந்தனர். தற்போது மத்திய அரசு வழங்கிய எம்பி பதவியை ஏற்றுக்கொண்ட இசைஞானி இளையராஜாவை சிலர் விமர்சித்தும் ஆதரவளித்தும் வருகிறார்கள்.

அமர் பிரசாத் ரெட்டி பேட்டி

இந்நிலையில் பாஜக கட்சியின் இளைஞர் மேம்பாட்டு மற்றும் விளையாட்டு பிரிவு துறையில் தமிழக மாநிலத்துறையின் தலைவரக இருக்கும் அமர் பிரசாத் ரெட்டி அவர்கள் பிரபல ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேட்டியளித்த நெறியாளர் அமர் பிரசாத் ரெட்டியை சரமாறியான கேள்விகளை கேட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் ரெட்டி, ஷர்மா, குர்மா என்று வந்துட்டீங்க என்று பேசியிருந்தார். தமிழன் இருப்பானா யார் நீங்க தமிழன் நான் தமிழன் இல்லையா. நான் பெரியார் மன்னாக நான் ஏற்றுக்கொள்ளவில்லை, இது தேசிய மண்ணு நான் இருக்கேன் என்று கூறியுள்ளார் அமர் பிரசாத்.

இளையராஜாவும் எம்பி பதவியும்

இதனையடுத்து புலவர் மன்னனை புகழ்ந்து பாட்டு பாடி பரிசு வாங்குவதை போல் எத்தனையோ பாட பாடி இருக்கிறார் இளையராஜா. அப்போது கிடையாத பதவி மோடியை புகழ்ந்ததால் இளையராஜாவுக்கு எம்பி பதவி கொடுத்திருக்கிறீர்களே என்று நெறியாளர் கேட்டுள்ளார்.

மேலும், கூச்சப்படாமல் இளையராஜா ஏற்றும் வெட்கப்படாமல் மத்திய அரசு எம்பி பதவி கொடுத்திருக்கிறது. இளையராஜாவை ஏற்கனவே தலித் சமுதாயத்தை சார்ந்தவர் என்றும் குறிப்பிட்டு விளம்பரம் தேடுகிறீர்களே ஏன் என்று கேட்டுள்ளார்.

அவர் மிகப்பெரிய கலைஞர், தகுந்த நேரத்தில் இளையராஜாவுக்கு பதவி கொடுக்கப்பட்டது என்று நெறியாளருக்கு அமரர் பதிலளித்துள்ளார். இந்த பேட்டியின் வீடியோ இணையத்தில் வைரலாகி பகிரப்பட்டு வருகிறது.