18 வருட திருமண வாழ்க்கை!! ஐஸ்வர்யா - தனுஷ் விவாகரத்துக்கு உண்மையான காரணமே இதான்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2004ல் நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமான சில ஆண்டுகளில் கணவர் தனுஷை வைத்து 3 என்ற படத்தினை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்தார்.
ஒரு இயக்குனராக படத்தில் நடிகையுடன் நெருக்கமாகவும் தனுஷை நடிக்க வைத்தும் இருக்கிறார். அப்போதெல்லாம் பிரிவு ஏற்படாத இருவருக்கும் திருமணமாகி 18 ஆண்டுகளுக்கு பின் அதுவும் இரு மகன்கள் வளர்ந்து வரும் நிலையில் பிரிவதாக அறிவித்தனர்.
அதற்கு காரணம் பலவிதத்தில் கூறப்பட்ட நிலையிலும் இருவரையும் ரஜினிகாந்த் சேர்த்து வைக்க போராடியிருக்கிறார். இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகர் செய்யாறு பாலு ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்து தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவுக்கான காரணத்தை பகிர்ந்துள்ளார்.
ஒருமுறை தனுஷ் பெற்றோர்கள் போயஸ் கார்டனில் இருக்கும் ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது ஒருவகையில் அவர்கள் அவமானப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அது நடந்திருக்கலாம். இந்த சம்பவம் தனுஷுக்கு தெரியவந்துள்ளது.
ஏற்கனவே குடும்பத்தினர் மீது அளவுகடந்த பாசத்தை வைத்திருக்கிறார் தனுஷ். ஒரு இடத்தில் அப்பாவோ அம்மாவோ கண்ணியமாக நடத்தப்படவில்லை என்றால் கோபம் வந்துவிடுமாம்.
இந்த விசயம் கேள்விப்பட்டு தான் பிரச்சனையே ஐஸ்வர்யாவிடம் ஏற்பட்டதாகவும் பெற்றோர்களுக்கு அவமானம் ஏற்பட்டதில் ஆவேசப்பட்ட தனுஷ் 150 கோடி செலவில் போயஸ் கார்டனில் வீட்டினை கட்டி பழித்தீர்க்க யாரையும் கூப்பிடாமல் கிரகபிரவேசம் செய்திருக்கிறாராம்.