1 மாதமாக மாதம்பட்டி ரங்கராஜை காணவில்லை.. பரபரப்பை கிளப்பிய ஜாய் பதிவு!

Cooku with Comali Madhampatty Rangaraj
By Bhavya Dec 01, 2025 08:30 AM GMT
Report

ஜாய் கிரிசில்டா

தமிழ் சினிமாவில் கடந்த சில வாரங்களாக அதிகம் பேசப்படும் ஒரு பிரபலம் ஜாய் கிரிசில்டா. பிரபல ஆடை வடிவமைப்பாளராக முன்னணி நடிகர்களின் படங்களில் பணிபுரிந்து கவனம் பெற்று மிகவும் பிரபலமடைந்தார்.

ஆனால் இப்போது பெரிய பிரச்சனையில் சிக்கிக்கொண்டு நீதிமன்றத்திற்கும் வீட்டிற்கும் அலைந்து கொண்டிருக்கிறார். முதலில் இயக்குநர் ஜெ ஜெ ஃபெட்ரிக்கை திருமணம் செய்த ஜாய் கிரிசில்டாவிற்கு ஒரு மகன் உள்ளார்.

ஆனால், கருத்து வேறுபாடு ஏற்பட விவாகரத்து பெற்றார். முதல் கணவரை விவாகரத்து செய்த பின் மாதம்பட்டி ரங்கராஜை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்று தெரிந்தும் ஜாய் திருமணம் செய்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

1 மாதமாக மாதம்பட்டி ரங்கராஜை காணவில்லை.. பரபரப்பை கிளப்பிய ஜாய் பதிவு! | Joy About Madhampatty Post Goes Viral

காணவில்லை! 

இந்நிலையில், ஜாய் அவரது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், " ராகா ரங்கராஜ்- வின் அப்பா மாதம்பட்டி ரங்கராஜுவை கடந்த 1 மாதமாக காணவில்லை. டிஎன்ஏ டெஸ்ட்-க்கு தலைமறைவாக உள்ளார். இவரை (event) பார்த்தால் உடனே எனக்கு மெசேஜ் செய்யவும்.

குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்குமாம் அதான் ஓளிந்து ஓடுகிறார். புரூப் பண்ணினா தான் சார் மாடிப்பர்.

என்னை நீங்கள் ஏமாற்றலாம், ஊரை நீங்கள் ஏமாற்றலாம், சுற்றி இருப்பவர்களை ஏமாற்றலாம் ஆனால் உங்கள் மனசாட்சியையும் கடவுளையும் நீங்கள் ஏமாற்ற முடியாது" என்று பகிர்ந்துள்ளார்.