முதல் பொண்டாட்டிக்கு எல்லாம் தெரியும்..கர்ப்பத்தை கலைக்க சொன்னார்!! மாதம்பட்டி ரங்கராஜ் 2ஆம் மனைவி
மாதம்பட்டி ரங்கராஜ்
பிரபல உணவு நிறுவன தொழிலதிபர் மாதம்பட்டி ரங்கராஜ் பற்றிய செய்திகள் தான் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வைரலாகி வருகிறது. இரண்டாம் திருமண விவகாரத்தில் மனைவி புகாரளித்ததை அடுத்து, தனக்கு மாதம்பட்டி ரங்கராஜ் அனுப்பிய வீடியோவை இணையத்தில் பகிர்ந்தார் ஜாய் கிரிஸில்டா. இந்நிலையில் ஜாய் கிரிஸில்டா அளித்த பேட்டியொன்றில் பல உண்மைகளை பகிர்ந்துள்ளார். மாதம்பட்டி ரங்கராஜுடன் இரு ஆண்டுகள் வாழ்ந்ததற்கான ஆதாரத்தை காட்டியுள்ளார்.
அவர் பேசுகையில், 2023ல் எங்களுக்கு சென்னையில் திருமணம் நடந்தது. எங்களுடைய திருமணத்திற்கு மாதம்பட்டி ரங்கராஜ் அவர்களின் குடும்பத்தினர் யாரும் கலந்து கொள்ளவில்லை. ஆனால் திருமணம் செய்துக்கொண்ட விஷயம் என்னுடைய மாமினார், மாமியார், அவரின் தம்பி, நண்பர்கள் என அனைவருக்கும் தெரியும். அதேப்போல் தலை தீபாவளிக்கு கோயம்பத்தூர் சென்றிருந்தேன்.
அப்போது என் மாமியார், தாலியில் குங்குமம் வைத்துவிட்டு, இப்போது தான் என்னுடைய மகன் சந்தோஷமா, சிரித்த முகத்தோடு இருப்பதை பார்க்கிறேன் என்று சொல்லி என்னை ஆசீர்வாதம் செய்தார்கள். நாங்கள் இருவரும் கணவன் மனைவியாக வாழ்வது, திருமணம் செய்து கொண்டது அவர்களுடைய குடும்பத்தில் இருக்கும் அனைவருக்குமே தெரியும்.
ஸ்ருதி பிரியா
அதேபோல் மாதம்பட்டி ரங்கராஜ் அவர்களின் முதல் மனைவியான ஸ்ருதி பிரியா அவர்களுக்கும் தெரியும். தெரிந்திருந்தும் ஸ்ருதி பிரச்சனை செய்யாமல் ஏன் அமைதியாக இருந்தார். என்னிடம் போனில் பேசி இருக்கலாம், இந்த வீட்டிற்கு வந்து பிரச்சனை செய்து இருக்கலாம். ஆனால் அப்படி எதுவும் செய்யாமல் ஏன் அமைதியாக இருந்தார். இதே வீட்டில் தான் நாங்கள் இருவரும் இரு ஆண்டுகள் வாழ்ந்து வருகிறோம். இந்த வீட்டில் லீஸ் டாக்குமெண்டில் கூட மாதம்பட்டி ரங்கராஜ் மனைவி என்று என் பெயர் தான் போட்டிருக்கிறது. அதில் அவர் கையெழுத்தும் போட்டுள்ளார்.
கலைக்க சொன்னார்
ஒரு பெண் குழந்தை வேண்டுமென மிகவும் ஆசைப்பட்டார். முதல் நான் கர்ப்பமானேன். பின் அது கலைந்துவிட்டது. அப்போது மிகவும் வருத்தப்பட்ட ரங்கராஜ் இப்போது என்னுடைய வயிற்றில் இருக்கும் குழந்தையை கலைத்துவிடலாம் என்று பலமுறை என்னிடம் சண்டைப்போட்டார்.
திருமணத்தை செல்லாதது என்று சொல்லிவிடலாம், ஆனால் குழந்தை பிறந்துவிட்டால் இது லீகலாகிவிடும் என்பதால் அவருடைய தம்பி மற்றும் நண்பர்கள் பேச்சைக்கேட்டு இப்படி செய்து வருகிறார் என்று ஜாய் கிரிஸில்டா தெரிவித்துள்ளார்.
மேலும் எனக்கு அவர் பணமும் சொத்தும் வேண்டாம், என் குழந்தைக்கு அப்பாவாக மாதம்பட்டி ரங்கராஜ் இருக்க வேண்டும், அவரை பலமுறை தொடர்பு கொண்டு பேசுவதற்காக முயற்சி செய்தேன். ஆனால் அவரை பேசவிடாமல் பிடித்து வைத்திருக்கிறார்கள். என்னிடம் பேசினால் இந்த பிரச்சனை அனைத்துமே சரியாகிவிடும் என்று தெரிவித்துள்ளார் ஜாய் கிரிஸில்டா.