குற்ற உணர்ச்சியே இல்லாம அலையுறான்!! ரங்கராஜை இறங்கி அடித்த ஜாய் கிரிஸில்டா..
ஜாய் கிரிஸில்டா
மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் அவரின் இரண்டாம் மனைவி ஜாய் கிரிஸில்டா பற்றிய விவகாரம் தான் டாப் ஹைலெட் நியூஸாக சமீபகாலமாக இருந்து வருகிறது.
தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது அடுக்கடுக்கான புகார்களை அளித்ததோடு, அவருடன் நெருக்கமாக இருந்து புகைப்படங்கள் வீடியோக்களை ஜாய் இணையத்தில் பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து பலர் விமர்சித்து பேசியநிலையில், விஜய்யுடன் ஜாய் கிரிஸில்டா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியபோது நடந்த ஒரு சம்பவம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. தற்போது அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.
அதில், ஒருத்தன் குற்ற உணர்ச்சியே இல்லாம அலையுறான். பெருமையாக தலையெழுப்பிக்கிட்டு நடக்கிறான். நீ உன்னை ஒரு உத்தமன் போல் காட்டிக்கொண்டு சுற்றிக்கிட்டே இருக்கிறார்ய்.
உன்னைப் போன்ற மனிதாபிமானம் இல்லாத ஒருவனை யாரும் பார்த்திருக்க முடியாது. நீங்க ஓடினாலும் சரி, ஒளிந்தாலும் சரி. கருவில் இருக்கும் உன் குழந்தையின் சாபம் உன்னை நிழலாகவே தொடரும்.. ஒருநாளும் உன்னை விட்டு போகாது என்று காட்டமான ஒரு பதிவினை பகிர்ந்து மாதம்பட்டி ரங்கராஜை வெளுத்து வாங்கியுள்ளார்.
