ஊர் மக்களுடன் போட்டோகூட எடுக்கலையா!! இட்லி கடை தனுஷ் என்ன செஞ்சிருக்காரு பாருங்க..
இட்லி கடை
நடிகர் தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை திரைப்படம் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்று வருகிறது.
நித்யா மேனன், ஷாலினி பாண்டே, பார்த்திபன், சத்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான இப்படத்தில், தான் சிறு வயதில் சொந்த ஊரில் பார்த்தவர்கள், பார்த்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து இக்கதையை எழுதியிருக்கிறார் தனுஷ்.
தனுஷ்
படம் இப்போது சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததால் தன் குடும்பத்துடன் சொந்த ஊரான சங்கராபுரத்தில் இருக்கும் குல தெய்வ கோயிலுக்கு சென்றுள்ளார் தனுஷ். சொந்த ஊருக்கு வந்த தனுஷுக்கு பலமான வரவேற்பு மக்கள் கொடுத்தனர்.
அதேசமயம் அடிக்கடி ஊருக்கு வரும் தனுஷ் தங்களுடன் நின்று ஒரு போட்டோகூட எடுத்துக்கொள்ளவில்லை. குல தெய்வ கோயிலில் வழிபாட்டினை முடித்துவிட்டு சொந்த ஊர் மக்களுக்கு கிடா வெட்டி விருந்து அளித்திருக்கிறார்.
இந்த விருந்தில் ஊர்க்காரர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாப்பிட்டு மகிழ்ந்திருக்கிறார்கள். மேலும் போட்டோ எடுத்துக்கொள்ளாவிட்டாலும் எங்கள் வயிற்றை நிறைய வைத்துவிட்டார் என்று தனுஷின் சொந்த ஊர் மக்கள் கூறியிருக்கிறார்கள்.