ஆரம்பமாகிய பிக்பாஸ் சீசன் 9 வீட்டுக்குள்ள இந்த அகோரியா!! இது புதுசா இருக்கே..

Vijay Sethupathi Bigg Boss Star Vijay Bigg boss 9 tamil
By Edward Oct 05, 2025 01:30 PM GMT
Report

பிக்பாஸ் சீசன் 9 

விஜய் டிவியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்த நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 9 இன்று அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கவுள்ளது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ள இந்நிகையில் மொத்தம் 20 போட்டியாளர்கள் கலமிறங்கவுள்ளார்கள்.

ஆரம்பமாகிய பிக்பாஸ் சீசன் 9 வீட்டுக்குள்ள இந்த அகோரியா!! இது புதுசா இருக்கே.. | Aghori Kalaiyarasan Enters Bigg Boss Season 9

பிக்பாஸ் சீசன் 9ல் யார் யார் கலந்து கொள்கிறார்கள் என்ற லிஸ்ட் அதிகாரப்பூர்வமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதில், ஸ்டென்டப் காமெடியன் விக்கல்ஸ் விக்ரம், குக் வித் கோமாளி கனி திரு,வாட்டர் மெலன் திவாகர், விஜே பார்வதி, வி.ஜே.ஷோபனா, பிரவீன்ராஜ் தேவசகாயம், நடிகை மாலினி ஜீவரத்தினம், நடிகர் சபரிநாதன், வியனா, இயக்குநர் பிரவீன் காந்தி, கேரளாவைச் சேர்ந்த மாடல் அழகி அப்சரா CJ, வினோத்பாபு, ஜனனி அசோக்குமார், வைஷாலி கேம்கர், ரோஷன், ரம்யாஜூ, மஞ்சுநாதன் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

அகோரி கலையரசன்

அதேபோல் தற்போது ஒரு வீடியோவும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. இணையத்தில் பிரபலமான அகோரி கலையரசனும் பிக்பாஸ் சீசன் 9ல் கலந்து கொள்ளவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதோடு பிரிந்த அவரது மனைவியும் அவருடன் இருப்பதால், தனக்கு ஆதரவாக அவரது மனைவிதான் இனிமேல் வீடியோக்களை பதிவிடுவார் என்றும் அகோரி கலையரசன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் ஆபாசமான முறையில் சைகைகளை செய்து வீடியோவை பகிர்ந்து பிரபலமான பலூன் அக்கா என்று கூறப்படும் அரோராவும் பிக்பாஸில் கலந்து கொள்ளவுள்ளார் என்ற தகவலும் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.