அஜித்துடன் காதல் வதந்தி..அதுக்கு தான் இங்க வந்தேன்!! நடிகை ஸ்வாதி ஓபன் டாக்..
நடிகை ஸ்வாதி
தமிழில் 1995ல் வெளியான தேவா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகினார் நடிகை ஸ்வாதி கிரண். இப்படத்தினை இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கினார்.
விஜய், சிவக்குமார், மனோரமா உள்ளிட்டவர்கள் நடித்த இப்படத்தின் விஜய்க்கு ஜோடியாக நடித்த ஸ்வாதி, 8 வது மற்றும் 9வது வகுப்பு படித்துக்கொண்டிருந்தார்.
மாடலிங் செய்திருந்த ஸ்வாதியின் புகைப்படத்தை பார்த்து எஸ் ஏ சந்திரசேகர் கூப்பிட்டு அழைத்து நடிக்க வைத்துள்ளார்.
அஜித்துடன் காதல் வதந்தி
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், நடிகர் அஜித்துடன் காதல் செய்தி பரவியது குறித்து பகிர்ந்துள்ளார். அதில், படம் பப்ளிசிட்டிக்காக நான் அஜித்தை காதலிப்பதாக செய்திகளை பரப்பினார்கள். அது எனக்கு விகவும் வருத்தமாக இருந்தது.
நான் ஹைதராபாத்தில் இருந்து வந்து 45 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன். சினிமாவிற்கு வந்துவிட்டோம் சாதிக்க வேண்டும் என்று தான் நானும் நடிகர் அஜித்தும் வந்தோம்.
அதன்பின் ஒரு குறிப்பிட்ட வயதுவரை நடிக்க வேண்டும் அதன்பின் திருமணம் செய்து கொண்டு என் குடும்பத்தை ப்பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். நான் என்ன நினைத்தேனோ அதைத்தான் நான் சாதித்தேன்.
கல்வி என்பது நமக்கு முக்கியம், என் கல்வியை முடித்தேன், நான் சென்னைக்கு குடும்பம் அமைப்பதற்காக வரவில்லை, நடிப்பிற்காக வந்தேன்.
அந்த நடிப்பை நன்றாக செய்துவிட்டு எனக்கு எப்போது வேண்டுமோ அப்போது குடும்ப வாழ்க்கையை தொடங்கினேன், நானும் அஜித்தும் காதலிப்பதாக சொன்னது வெறும் வதந்திதான் என்று நடிகை ஸ்வேதா தெரிவித்துள்ளார்.