தனியாக மும்பையில் செட்டிலாகிய சூர்யா மனைவி!! வைரலாகும் நடிகை ஜோதிகாவின் அவுட்டிங் புகைப்படம்..

Suriya Jyothika
By Edward Apr 27, 2023 02:30 PM GMT
Report

மும்பையில் பிறந்து நடிகர் அஜித், சிம்ரன் நடிப்பில் வெளியான வாளி படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் நடிகை ஜோதிகா. இப்படத்தினை தொடர்ந்து சூர்யா, அஜித், விஜய், விக்ரம் உள்ளிட்ட தமிழ் நடிகர்களுடன் நடித்து பிரபலமானார் ஜோதிகா.

இந்தி, தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்து வந்த ஜோதிகா சூர்யாவுடன் பல படங்களில் ஜோடியாக நடித்து காதலில் விழுந்தார். 4 வருட காதலுக்கு பின் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகிய ஜோதிகா இரு குழந்தைகளை பெற்றெடுத்து குடும்பத்தினை பார்த்து வந்தார். பிள்ளைகள் வளர்ந்த பின் 36 வயதினிலே படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார் ஜோதிகா.

சமீபத்தில் மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் நடித்து வரும் ஜோதிகா கணவருடன் மும்பையில் தனியாக வீடு வாங்கி செட்டிலாகிவிட்டார் என்றும் பெற்றோரிடமிருந்து பிரித்துவிட்டார் என்று விமர்சனங்கள் எழுந்தது.

தற்போது மும்பையில் தனியாக அவுட்டிங் சென்றுள்ளார் ஜோதிகா. அங்கு எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.