ராதிகாவின் தாய் கிழவி படம் எப்படி இருக்கு!! ஜோதிகா கொடுத்த விமர்சனம்..

Sivakarthikeyan Suriya Jyothika Radhika Sarathkumar Tamil Movie Review
By Edward Feb 26, 2026 11:00 AM GMT
Report

தாய் கிழவி

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் தாய் கிழவி. நடிகை ராதிகா முக்கிய ரோலில் நடிப்பில் பல நட்சத்திரங்கள் இணைந்து நாளை பிப்ரவரி 27 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது தாய் கிழவி படம்.

ராதிகாவின் தாய் கிழவி படம் எப்படி இருக்கு!! ஜோதிகா கொடுத்த விமர்சனம்.. | Jyothika Praises Thaai Kizhavi After Premiere

படத்தின் ப்ரீமியர் ஷோ நேற்று சினிமா பிரபலங்களுக்கு திரையிடப்பட்டது. படத்தை பார்க்க சரத்குமார், சூர்யா, ஜோதிகா, ஷாலினி, நிரோஷா, அதர்வா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் பார்த்துள பழக்குழுவினரை பாராட்டினர். அதில் நடிகை ஜோதிகா படத்தை பார்த்து தன்னுடைய கருத்தை பகிர்ந்திருக்கிறார்.

நடிகை ஜோதிகா

அதில், பெண்மையின் சக்தியை இவ்வளவு அழக்காக காட்டப்பட்டிருப்பதை பார்க்கவே ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மனதை வருடும், நல்ல உணர்வை தரும் படமாக மட்டுமில்லாமல் முன்னேற்றம் தரக்கூடிய சினிமாவாகவும் தாய் கிழவி திகழ்கிறது.

ராதிகாவின் தாய் கிழவி படம் எப்படி இருக்கு!! ஜோதிகா கொடுத்த விமர்சனம்.. | Jyothika Praises Thaai Kizhavi After Premiere

இயக்குநர் சிவக்குமார் முருகேசன், இது உண்மையிலேயே உங்களுடைய முதல் படமா? நம் சமூகத்திற்கு மிகவும் முக்கியமான ஒரு செய்தியை நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள். அதை மரியாதையான நகைச்சுவையுடன் இயல்பாக கூறியிருப்பது அருமை. ஒரு பெண்ணாக உங்கள் கதையை பார்க்கும்போது நான் பெருமையாக உணர்கிறேன். உங்கள் சிந்தனையே உங்களது குணநலனை காட்டுகிறது.

ராதிகாவின் தாய் கிழவி படம் எப்படி இருக்கு!! ஜோதிகா கொடுத்த விமர்சனம்.. | Jyothika Praises Thaai Kizhavi After Premiere

சிவகார்த்திகேயன்

ராதிகா போன்ற சக்திவாய்ந்த ஆளுமை நிறைந்த நடிகைக்கு உண்மையான, தகுதியான இடத்தை கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு நன்றி. வயது என்ற எல்லையை தாண்டி ஒரு பெண்ணையும் அவரது திறமையையும் மையமாக வைத்து இப்படத்தை தயாரித்ததற்கு அனைத்து நடிகைகளின் சார்ப்பிலும் நான் நன்றி தெரிவிக்கிறேன். உங்களுக்கு ஸ்டார் வேல்யூவை பயன்படுத்தி பெண்களுக்கு தேவையான இப்படத்தை கொடுத்ததற்கு நன்றி.

ராதிகாவின் தாய் கிழவி படம் எப்படி இருக்கு!! ஜோதிகா கொடுத்த விமர்சனம்.. | Jyothika Praises Thaai Kizhavi After Premiere

மேலும் பேசிய ஜோதிகா, ராதிகா சரத்குமார் மேடம், நீங்கள் உண்மையிலேயே ஆச்சரியப்படுத்துகிறீர்கள். ரொம்பவே ஊக்கம் கொடுப்பவர், இந்த ரோலிற்காக உடல்ரீதியாக நீங்கள் கொடுத்திருக்கும் உழைப்பை நினைத்து பார்க்கவே முடியவில்லை. தாய் கிழவி ஒரு சக்தி வாய்ந்த, புத்திசாலித்தனமான ரோல் மட்டுமில்லாமல், ரொம்பவும் க்யூட்டாக இருந்தார்.

ஆஃப் கேமராவில் நாங்கள் அறிந்த ராதிகாவை பிரதிபலிப்பது போன்றுதான் இக்கதாபாத்திரம் இருந்தது. உங்கள் உடல் மொழி, ஸ்டைல், குரல் மாற்றம், சிரிப்பு, வசன உச்சரிப்பு என அனைத்தும் உங்களின் தனுத்துவமான நடிப்பை நிரூபிக்கிறது. இப்படம் பெண்களை மையப்படுத்திய படம் மட்டுமில்லை, சினிமாவை ஒருபடி முன்னேற்றும் படம். தாய் கிழவி டீம் நீங்கள் பெருமைப்பட்டுக்கொள்ளலாம் என்று ஜோதிகா தெரிவித்துள்ளார்.