பிரபல நடிகையின் காலில் விழுந்த நடிகை ஜோதிகா.. வைரலாகும் புகைப்படங்கள்

Suriya Jyothika Actress
By Bhavya Feb 19, 2025 12:30 PM GMT
Report

நடிகை ஜோதிகா

சூர்யாவின் பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில் நடித்து நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா.

அதன் பின் இவர் முகவரி, குஷி, ரிதம், தெனாலி என முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் ரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

பிஸியாக நடித்துக் கொண்டு வந்தவருக்கு நடிகர் சூர்யாவுடன் காதல் ஏற்பட இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிக்கு தியா மற்றும் தேவ் என ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

திருமணம், குழந்தைகள் என சினிமா பக்கம் வராமல் இருந்த ஜோதிகா இப்போது மீண்டும் நடிப்பில் பிஸியாகிவிட்டார். தற்போது, டப்பா கார்ட்டெல் என்ற பாலிவுட் வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.

பிரபல நடிகையின் காலில் விழுந்த நடிகை ஜோதிகா.. வைரலாகும் புகைப்படங்கள் | Jyothika Seek Blessings From Actress

புகைப்படங்கள் 

இந்நிலையில், நேற்று டப்பா காட்டெல் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது ஜோதிகா, நடிகை ஷபானா ஆஸ்மியின் பாதங்களைத் தொட்டு ஆசி பெற்றார். தற்போது, இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ,  

GalleryGalleryGalleryGallery