ரிதம் படத்தில் ஜோதிகாவுக்கு பதில் நான்! இயக்குநர் மிரட்டி.. நடிகை மறைத்த பலநாள் ரகசியம்!
விந்தியா
கடந்த 1999-ஆம் ஆண்டு இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான படம் ’சங்கமம்’. இந்த படத்தில் ரகுமான் கதாநாயகனாக நடித்திருந்தார்.
இவருக்கு ஜோடியாக விந்தியா நடித்து வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகை விந்தியாவிற்கு அடுத்தடுத்து படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.

மறைத்த ரகசியம்!
இந்நிலையில், தன்னுடைய திரையுலக பயணம் குறித்து விந்தியா சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அதில், " ரிதம் படத்தில் மீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த படத்தில் ஒரு சின்ன ரோலில் ஜோதிகா நடித்திருப்பார். அந்த கதாபாத்திரத்திற்கு என்னை தான் கேட்டு புகைப்படங்கள் எடுத்திருந்தார்கள்.

அப்போது இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா அவர் படத்தில் நடிக்க வைக்க என்னை தயாரிப்பாளரிடம் கேட்டார். இயக்குநர் வசந்த், ‘சங்கமம்’ படத்தில் நடித்தால் ‘ரிதம்’ படத்தில் நடிக்க முடியாது என்று சொன்னார்.
ஏனென்றால் அவர் தான் என்னை அறிமுகப்படுத்த நினைத்தார். அதன்பின்னர் வசந்த் சார் கன்வின்ஸ் ஆகி சுரேஷ் கிருஷ்ணா சார் என்னை ’சங்கமம்’ படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார்.