மீனாவின் மறைந்த கணவரை வைத்து காசு சம்பாதித்த பயில்வான்? படுமோசமாக திட்டிய பிரபல தயாரிப்பாளர்..

Meena Gossip Today Bayilvan Ranganathan
By Edward Jul 06, 2022 01:13 PM GMT
Report

சினிமா நட்சத்திரங்களின் அந்தரங்கம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து அவதூறான யூடியூப் சேனல்களில் விமர்சித்து பேசி வருகிறவர் நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன்.

சமீபத்தில் பல நட்சத்திரங்களின் அதுவும் நடிகைகளை பற்றி படுமோசமான வார்த்தைகளை பேசு காசு சம்பாதித்து வருகிறார் என பலர் அவர் மீது புகாரளித்தும் வருகிறார்கள். அப்படி சமீபத்தில் கூட தயாரிப்பாளர் கே ராஜன் அவர்கள், பயில்வான் ரங்கநாதனை திட்டி பேசி வந்தார். அதையும் மீறி பயில்வான் செயல்பட்டு வருகிறார்.

இதற்கு பதிலடி கொடுத்து கே ராஜன், சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திட்டி பேசியுள்ளார். சாவை வைத்து யூடியூப்பில் சிலர் காசு சம்பாதித்து வருகிறார்கள். பிணம் திண்ணி பேய்கள். வெளிப்படையாக சொல்கிறேன், நான் திட்டியப்பின் அமைதியாக இருந்தார் அருமை சகோதரர். ஆனால் தாய்மார்களை இன்றும் விட்டுவைக்கவில்லை.

அப்படி மீனா கணவர் இறப்பினை வைத்து பேசி காசு சம்பாதிக்கிறான். எப்படி இறந்தார், என்ன மர்மம், மெடிக்கல் சர்டிஃபிகேட் காட்டவில்லை என்று பேசி வருகிறார். உங்களுக்கு என்ன அவர் இறப்பில். ஒரு அடக்கமான சகோதரி மீனா.

ஒரு நல்ல நடிகையின் கணவர், சிறு குழந்தையின் தந்தையை எண்ணி கலையுலகமே அழுகிறது. இதில் ஒருத்தவன் மட்டும் காசு சம்பாதிக்கிறான். புகாரளித்தும் காவல் துறை இதை எதுவும் கேட்கவில்லை என்று கோபத்தில் பேசியுள்ளார் தயாரிப்பாளர் கே. ராஜன்.