ரஜினியால் கெட்டவங்கள விட கமலால் கெட்டவங்க அதிகம்.. ஆதங்கத்தை உடைத்த தயாரிப்பாளர்..
தமிழ் சினிமாவில் இரு துருவ நட்சத்திரங்களாக 80களில் இருந்து கொடிக்கட்டி பறந்து வருபவர்கள் கமல் ஹாசன், ரஜினிகாந்த். தமிழ் சினிமாவில் சிவாஜி, எம்ஜிஆருக்கு பின் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடும் நடிகர்களாக சூப்பர் ஸ்டார், உலக நாயகன் இருவரும் திகழ்ந்து வருகிறார்கள்.
அப்படி ரஜினிகாந்த ஜெயிலர் படத்திலும், கமல் ஹாசன் இந்தியன் 2, பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பிஸியாக இருந்து வருகிறார்கள். இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் அவர்கள் ரஜினி மற்றும் கமல் குணங்களை பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.
பொன்னியின் செல்வன் படத்தில் கலந்து கொண்டதை பெரியளவில் விமர்சிக்க கூடாது. சின்ன நிகழ்ச்சிகளுக்கு அவர்கள் ஏன் செல்ல வேண்டும் நாங்கள் செல்கிறோம் என்று கூறியுள்ளார்.
மேலும் ரஜினிகாந்த் பெயர் தான் முதலில் இருக்க வேண்டும். ஏனென்றால், ரஜினி தான் மரியாதைக்குரியவர், நல்ல குணம் படைத்தவர். அவரால் வாழ்ந்தவர்கள் பலர். 2.0 படத்தின் நஷ்டத்திற்கு ரஜினிகாந்த் காரணமில்லை, சங்கர் தான். ரஜினியால் கெட்டவர்கள் யாருமில்லை.
ஆனால், கமலால் கெட்டவர்கள் நிறையபேர். தானு, காஜாமொய்தீன், 7 சேனல் நாராயணன் என்று பலர் அவரால் நஷ்டமானவர்களின் வரலாறு இருக்கிறது என்று கூறியுள்ளார் கே ராஜன். தற்போது கமல் மாறிக்கொண்டு வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.