விஜய் டிவியால் விரக்தியின் உச்சிக்கே சென்று மொட்டை அடித்துக்கொண்ட நடிகர்
Kaatrukenna Veli
Raghavendran Puli
By Parthiban.A
விஜய் டிவியின் காற்றுக்கென்ன வேலி தொடரில் மாறன் என்கிற ரோலில் நடித்து வந்தவர் நடிகர் ராகவேந்திரன் புலி. அவர் கடந்த சில வாரங்களாக பல்வேறு அதிர்ச்சி புகார்களை சொல்லி தான் மீடியாவை விட்டு வெளியேறப்போவதாக தெரிவித்தார்.
தனக்கு சீரியலில் நடிப்பதற்கு மாதத்திற்கு 6000 ருபாய் மட்டுமே சம்பளம் தரப்பட்டு இருக்கிறது என்றும் அவர் சொல்லி இருக்கிறார். பிச்சைக்காரன் கூட என்னை விட அதிகம் சம்பாதிப்பான் எனவும் அவர் சொன்னது அனைவருக்கும் ஷாக் ஆனது.
தற்போது சீரியலில் இருந்து வெளியேறி இருக்கும் அவர் கோவிலுக்கு சென்று மொட்டை அடித்து தனது depression குறைய கடவுளை வேண்டியதாக அவர் தெரிவித்து உள்ளார்.