மலேசியாவை தளபதி விஜய்க்காக கண்ட்ரோலில் எடுத்த மாலிக்!! இவரின் எஸ்டிடி தெரியுமா?
ஜனநாயகன்
KVN நிறுவனம் தயாரிப்பில், நடிகர் விஜய்யின் கடைசி படமாக இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் ஜனநாயகன். இப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வரும் 2026 ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

அனிருத் இசையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி தளபதி திருவிழா என்ற பெயரில் மலேசியாவில் டிசம்பர் 27 ஆம் தேதி நடத்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டது. அதன்படி ஜனநாயகன் பட விழாவில் ஸ்டேடியத்தில் சுமார் 80 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்ற தகவல் வெளியான.
மாலிக்
இந்நிலையில், ஆடியோ லான்ச் நிகழ்ச்சி நாளை நடபெறவுள்ள நிலையில், இன்று விஜய் தனி விமானத்தில் மலேசியாவுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது அவரை வரவேற்பை பிரபலம் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
அவர் வேறு யாருமில்லை, தமிழ் சினிமாவில் வெளியாகும் பல படங்களில் மலேசிய உரிமத்தை வெற்று வரும் டத்தோ அப்துல் மாலிக் என்பவர் தான் அவர். மலேசியாவில் நடக்கும் ஜனநாயகன் ஆடியோ லான்ச், இவரின் மாலிக் ஸ்டேடியத்தில் தான் நடக்கவுள்ளது.

இந்நிகழ்ச்சிக்காக 5 மாதங்களுக்கு முன்பே பொறுப்புகளை தயாரிப்பு நிறுவனம் கொடுத்துள்ளது. சமீபத்தில், மாலிக் தொடங்கிய நகைக்கடை திறப்பு விழாவில் தான் நடிகர் சிம்பு கலந்து கொண்டிருக்கிறார். மலேசியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் இவரும் ஒருவர் தான்.
தன் வசம் பொறுப்பு வந்ததும் மலேசிய அரசின் சிறப்பு அனுமதியை வாங்கியவர், அதன்பின் புகித் ஜலீல் மைதானத்தை சுமார் 5 மாத காலத்திற்கு வாடகைக்கு வாங்கி மேடை அமைத்து, பல வேலைகளை செய்திருக்கிறார்.ஜனநாயகன் மற்றும் பராசக்தி படங்களில் மலேசியா ரிலீஸ் உரிமத்தை இவர் தான் கைப்பற்றியிருக்கிறார்.
