ஜனநாயகன் படம் எப்படி இருக்கு!! இந்த பொங்கலுக்கு செம்ம கலெக்ஷனாம்!! முதல் விமர்சனம்..
நடிகர் விஜய்யின் கடைசி படமாக இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் ஜனநாயகன். இப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வரும் 2026 ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
அனிருத் இசையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி தளபதி திருவிழா என்ற பெயரில் மலேசியாவில் டிசம்பர் 27 ஆம் தேதி நடத்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டது. அதன்படி ஜனநாயகன் பட விழாவில் ஸ்டேடியத்தில் சுமார் 80 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்ற தகவல் வெளியான.

எப்படி இருக்கு
இந்நிலையில், ஆடியோ லான்ச் நிகழ்ச்சி நாளை நடபெறவுள்ள நிலையில், இன்று விஜய் தனி விமானத்தில் மலேசியாவுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். மேலும், அனிருத், படத்தின் நாயகி பூஜா ஹெக்டே, இயக்குநர் அட்லீ உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் மலேசியா சென்றுள்ளனர்.
இந்நிலையில், ஜனநாயகன் படம் எப்படி இருக்கிறது என்று பிரபல தியேட்டர் உரிமையாளர் எக்ஸ் தள பக்கத்தில் தன்னுடைய கருத்தினை தெரிவித்துள்ளார். அதில், ஜனநாயகன் படத்தின் ரிப்போர்ட் மிகச்சிறப்பாக வந்துள்ளது. இந்த பொங்கள் நமக்கு செம்ம கலெக்ஷன்மா என்று கூறியிருக்கிறார். இதற்கு பலரும் ஃபயர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.