52-வது பர்த்டே!! நடிகை கஜோல் தேவ்கனின் சொத்து மதிப்பு..

Kajal Aggarwal Ajay Devgn Indian Actress Net worth
By Jai Aug 05, 2026 08:30 AM GMT
Report

கஜோல்

1992 வெளிவந்த Bekhudi என்கிற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கஜோல். தொடர்ந்து பாலிவுட்டில் நடித்து வந்த இவர், தமிழில் 1997ல் வெளிவந்த மின்சார கனவு படத்தில் நடித்தார். இதன்பின் பல ஆண்டுகள் கழித்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்திருந்தார்.

இந்திய அளவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் இவர் நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் கஜோல். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

52-வது பர்த்டே!! நடிகை கஜோல் தேவ்கனின் சொத்து மதிப்பு.. | Kajol Has An Estimated Net Worth Of Rs 240 Crores

கிட்டத்தட்ட 33 ஆண்டுகளாக உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் கஜோல், தற்போது வரை நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். ஆகஸ்ட் 5 ஆம் தேதி இன்று தன்னுடைய 52வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

ஒரு படத்திற்கு ரூ. 4 கோடி வரை சம்பளமாக வாங்கும் நடிகை கஜோலின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ. 240 கோடி முதல் ரூ. 249 கோடி வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.