கண்ட நேரத்துல அங்க போகக்கூடாது, இருக்க பேரும் போய்டும்! புலம்பித்தள்ளும் நடிகை கஜோல்..
இந்தி மொழியில் முன்னணி நடிகையாகவும் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை கஜோல். சமீபத்தில் தமிழில் விஐபி 2 படத்தில் நெகடிவ் ரோலில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார். இணையத்தில் எப்போதாவது வரும் கஜோல் இன்ஸ்டாகிராம், டிவிட்டர் போன்ற கணக்கில் அவ்வப்போது மட்டும் எதாவது போஸ் போடுவார்.
இதுவரை 732 பதிவுகளை மட்டும் பதிவிட்டு வரும் கஜோல் 12. 6 மில்லியன் பாலோவர்ஸ்கலை பெற்றுள்ளார். அப்படியிருக்கும் நிலையில் சமுகவலைத்தளங்கள் பற்றி புலம்பி பேசியுள்ளார் கஜோல். ரசிகர்கள் தங்களின் நட்சத்திரங்களை திரையில் பார்த்தால் மட்டுமே மதிப்பு கூடும்.
அடிக்கடி சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களுடன் பேசிகிட்டே இருந்தால் அந்த மதிப்பு குறைந்துவிடும். என்னுடைய ஆரம்பகாலக்கட்ட சினிமாவில் திரையில் தோன்றியவர்கள் மட்டுமே பிரபங்களாக காணப்பட்டனர்.
ஆனால் தலைமுடி, நகங்கள் போன்றவற்ரை வைத்தும் கூட பிரபலங்களாக மாறிவிடலாம். அப்படி 24 மணி நேரமும் நட்சத்திரங்கள் மக்கள் உட்பட சமுக ஊடங்களில் செலவிடுகிறார்கள். ரசிகர்களுக்காக புகைப்படங்களை பதிவிட்டும் கிடைக்கும் நேரத்தில் வருவதுமாக இருக்கும் நட்சத்திரங்கலை விமர்சிக்கவில்லை.
ஆனால் பல முறை இணையத்தில் பார்த்துவிட்டு திரையில் தோன்றினால் அதை மக்கள் எப்படி பார்ப்பார்கள். இதுபோன்ற விசயங்களால் தான் நான் அதிகமாக சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பதில்லை என்று கூறியுள்ளார் நடிகை கஜோல்.