யார் அந்த ஜானகி!! இதுவரை யாருக்கும் தெரியாத கமல் பட ஹீரோயின்களின் பெயர்.. இப்படியொரு ரகசியமா!!
Kamal Haasan
Gossip Today
By Edward
சினிமா நட்சத்திரங்களின் வெற்றிக்கு பின் யாராவது ஒருவர் இருப்பார்கள்.
அப்படி சில நட்சத்திரங்களுக்கு ஜாதகம் மற்றும் நியுமராலஜி போன்ற சில செண்டிமெண்ட்கள் இருக்கும்.
அப்படித்தான் கமல் படங்களில் நடிகைகளின் பெயரில் சில செண்டிமெண்ட்டை வைத்திருக்கிறார் கமல்.
உலக நாயகன் படங்களுக்கு பெரும்பாலும் கிரேஷி மோகன் தான் கதை ஆசிரியராக பணியாற்றி இருக்கிறார்.
அப்படி கமல் படங்களான தெனாலி, பம்மல் கே சம்மந்தம், வசூல் ராஜா எம்பிபிஎஸ், அவ்வை சண்முகி போன்ற படங்களில் கதாநாயகிகளின் பெயர் ஜானகி என்று தான் இருக்கும்.
இதற்கு என்ன காரணம் என்ற ரகசியம் தற்போது வெளியாகியுள்ளது.
கிரேஷி மோகனின் வளர்ச்சிக்கு அவரது ஆசிரியர் முக்கிய காரணம் என்பதால் அவர் பெயர் ஜானகி என்பதால் தான் கமல் படங்களில் ஜானகி என்று பெயரை வைத்திருக்கிறாராம்.