40 வருட மர்மம்: ஜெமினி மகள் ரேகாவுடன் தனி அறையில் கமல் ஹாசன்!! வெளுத்துவாங்கிய மனைவி வாணி..
கமல் - ரேகா
சினிமாத்துறையை சேர்ந்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை எப்போது ரசிகர்களுக்கு ஒரு பெரும் புதிராகவே இருந்து வருகிறது. பல ஆண்டுகளுக்கு பின் சினிமா பிரபலங்களின் சில சம்பவங்கள் வெளியாகும் போது பெரும் பேசுபொருளாகும். அப்படி 1970ல் தமிழ் சினிமாவையே உலுக்கிய சம்பவமாக கமல் ஹாசன், ரேகா மற்றும் அவரது மனைவி கணபதி தொடர்பான சம்பவம் தான் பேசு பொருளானது.
1979ல் ஓட்டல் சோழா ஷெரட்டனில் கமல் ஹாசனுடன் ஒரே ரூமில் ஜெமினி கணேசனின் மகள் ரேகாவுடன் இருந்ததை கமல் மனை வாணி கணபதி பார்த்ததாக ஓட்டல் ஊழியர் பார்த்ததாக அப்போதைய பத்திரிக்கையை பேசப்பட்டது. ஆனால் எது உண்மை என்று பெரியளவில் வெளிச்சத்திற்கு வரவில்லை.
வெளுத்துவாங்கிய மனைவி
இந்த சம்பவம் குறித்து பத்திரிக்கையாளர் ஒருவர் அளித்த பேட்டியில், அப்போது அந்த ஓட்டலில் நான் இரவு வேலைக்கு வந்தபோது அந்த இடம் முழுவதும் ஒரே சலசலப்பாக இருந்தது.
வரவேற்பறையில் இருந்த பெண்கள், கமல் ஹாசனும் ரேகா கணேசனும் ஓட்டலில், ரேகாவின் அறையில் இருந்தபோது கமலின் மனைவி வாணி கணபதி வந்து தன் கணவரை பகிரங்கமாக திட்டினார் என்பதை கூறியதாக தெரிவித்துள்ளார். இச்சம்பவம் இயக்குநர் யாஷ் சோப்ரா இயக்கத்தில் அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா பச்சன் இணைந்து நடித்த சில்சியா படத்தில் ரேகா நடித்துக்கொண்டிருந்தார்.
1981ல் கமல் - ஸ்ரீதேவி நடித்த மீண்டும் கோகிலா படத்திலும் ரேகா ஒப்பந்தமாகி இருந்தார். இந்த படப்பிடிப்பின் போது கமலுக்கும் ரேகாவுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதாகவும் இந்த உறவு அப்போதைய காலக்கட்டத்தில் பெரியளவில் கவனத்தை ஈர்க்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஓட்டல் மோதலுக்கு பின் மீண்டும் கோகிலா படத்தில் இருந்து ரேகா நீக்கப்பட்டு, மலையாள நடிகை தீபா(உன்னி மேரி) நடித்தார் என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை ரேகா மற்றும் கமல் இருவரும் இந்த விஷயம் குறித்து மறுக்கவோ உறுதிப்படுத்தவோ செய்யாமல் இருந்தனர்.
இதனை தொடர்ந்து, கமல் ஹாசன் வாணி கணபதியை, 1988ல் விவாகரத்து செய்யும் முன்பே, சரிகா கமல் ஹாசனால் கர்ப்பமானார். அதன்பின் வாணி கணபதியை விவாகரத்து செய்து சரிகாவை மணந்தார் கமல். இது ஒரு பக்கம் இருக்க, ரேகா, அபிதாப் பச்சனுடன் இடையே கிசுகிசு கதை பாலிவுட்டின் மிகவும் பேசப்பட்டது.