அந்த விசயத்தில் உலக நாயகனை பார்த்து பயந்து ஓடும் நடிகைகள்!! கமல் ஹாசனையே நடுங்க வைக்கும் பிரபல நடிகை..
சினிமாவில் நடிப்பு அரக்கன் என்றும் உலக நாயகன் என்றும் புகழப்பட்டு வருபவர் கமல் ஹாசன்.
அவருடன் நடிக்கும் பல நட்சத்திரங்கள் நடிக்க பயப்படும் அளவிற்கு பதட்டப்படுவார்கள். அதே சமயம் அவருடன் நடிக்க சில நடிகைகள் தெரிக்க ஓடவும் செய்வார்கள்.
ஆனால் கமல் ஹாசனே பயந்து போகும் அளவிற்கு இருந்தவர் தான் நடிகை ஊர்வசி. இதுகுறித்து சமீபத்தில் கிரேசி மோகன் ஒரு வீடியோவில் பகிர்ந்துள்ளார். அதில் கமல் ஹசன் மிரண்டு போய் பேசிய சம்பவத்தையும் பகிர்ந்துள்ளார்.
கமலுடன் நடிகை ஊர்வசி, மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும் போன்ற இரு படங்களில் நடித்துள்ளார். அப்படங்களில் நடிக்கும் போது கமலே அச்சரியப்படும் வகையில் ஊர்வசி, தன் சொந்தமான டயலாக்குகளால் தூள் கிளப்பி இருக்கிறார்.
அதுமட்டும் இல்லமால் அவருடன் நடிக்கும் போது பார்த்து தான் நடிக்க வேண்டும். நம்மையே கீழே தள்ளும் அளவிற்கு நடிக்கிறாரே என்று கமல் ஹாசனே பயந்து கூறியுள்ளாராம். அப்படியொரு நடிப்பை வெளிப்படுத்தி நடிப்பில் அப்படியே ஒன்றிவிடுவாராம் நடிகை ஊர்வசி.