நைட் 2 மணி..ஸ்மோக்கிங் ரூமில் கம்ருதீன் - பாரு!! வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்..
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கப்பட்டு வரும் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது 50 நாட்களை தாண்டி ஒளிப்பரப்பாகி வருகிறது. கடந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்ற கெமி, எலிமினேட்டாகி பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார். இதனையடுத்து பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களிடம் தனித்தனியாக வீடியோ போட்டு காட்டப்பட்டது.

கம்ருதீன் - பாரு
அதில் கம்ருதீன் நண்பர் ஆர்யன், தனியாக விளையாட்டை விளையாடு என்று கூறினார். இதை கம்ருதீன், பாருவிடம் சொல்ல, நான் உன் விளையாட்டை கெடுக்கவில்லை, நாம் சேர்ந்தே இருப்போம், வெளியில் எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று கம்ருதீனை மூளைச்சலவை செய்தார்.
தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நள்ளிரவு 2 மணியளவில், பாரு மற்றும் கம்ருதீன் இருவருமே ஸ்மோக்கிங் அறைக்கு சென்று வெளியே வருகிறார்கள். அந்நேரம் FJ துணியை காயப்போட்டுக்கொண்டு இருக்க, வியானா அவருடன் பேசிக்கொண்டிருக்கிறார்.

அப்போது பாரு, கம்ருதீனும் ஸ்மோக்கின் அறையில் இருந்து வெளியே வந்ததை பார்த்துவிட்டு, ஏய் என்னடா, ரெண்டு பேரும் அந்த ரூமில் இருந்து வருகிறார்கள் என்று கூறியிருக்கிறார்கள் இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வர, நெட்டிசன்கள் பார்வதியை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.