மகளுக்கு முட்டுக்கட்டையா இருக்காதீங்க..கனகா அம்மாவிடம் ரஜினி சொன்ன அட்வைஸ்..

Rajinikanth Devika Kanaka Tamil Actress
By Jai Aug 10, 2026 02:45 PM GMT
Report

கனகா

தமிழ் சினிமாவில் 60, 70 களில் கொடிக்கட்டி பறந்த நடிகை தேவிகாவின் மகளாக 80களில் அறிமுகமானவர் தான் நடிகை கனகா. கங்கை அமரன் இயக்கத்தில் கரக்காட்டக்காரன் படத்தின் மூலம் அறிமுகமாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று அடுத்தடுத்த படங்களில் நடித்து டாப் நடிகையானார்.

மகளுக்கு முட்டுக்கட்டையா இருக்காதீங்க..கனகா அம்மாவிடம் ரஜினி சொன்ன அட்வைஸ்.. | Kanaka Devika Rajinikanth You Re Not Letting Her

அம்மா தேவிகாவின் மரணத்திற்குப்பின் வீட்டிலேயே முடங்கிய கனகா, சமீபத்தில் தான் வெளியில் தலைக்காட்டினார். சமீபத்தில் கனகாவை சந்தித்த நடிகை குட்டி பத்மினி, அவர் குறித்த சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில், கனகா படத்தில் ஹீரோயினாக நடிக்கும்போது அவரின் அம்மா தேவிகா நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு வசனங்களில் எல்லாம் தலையிடுவார். இதெல்லாம் சரியா வரும், சரியா வராது என்று சொல்வார். கனகா மீது முழு கவனத்தையும் வைத்து அனைத்திலும் தலையிடுவார் தேவிகா.

மகளுக்கு முட்டுக்கட்டையா இருக்காதீங்க..கனகா அம்மாவிடம் ரஜினி சொன்ன அட்வைஸ்.. | Kanaka Devika Rajinikanth You Re Not Letting Her

ரஜினி சொன்ன அட்வைஸ்

அப்படித்தான் ரஜினிக்கு ஜோடியாக கனகா நடித்த அதிசய பிறவி படத்திலும் நடந்து கொண்டார். இதை கவனித்த ரஜினிகாந்த், தேவிகாவிடம் சென்று அமர்ந்து, அம்மா நீங்களும் ஒருகாலத்தில் பெரிய நடிகையாக இருந்தவர்தான்.

மகளுக்கு முட்டுக்கட்டையா இருக்காதீங்க..கனகா அம்மாவிடம் ரஜினி சொன்ன அட்வைஸ்.. | Kanaka Devika Rajinikanth You Re Not Letting Her

உங்களுக்கே தெரியும், நீங்கள் இப்படி அமர்ந்து கொண்டு எல்லாத்திலும் தலையிட்டுக் கொண்டிருந்தால் உங்கள் மாள் எப்படி பெரிய ஹீரோயினாக மாறுவார். நீங்கள் இங்கேதான் இருக்கிறீர்கள், பின் எப்படி உங்களை மீறி தவறாக எடுத்துவிட முடியும் என்று கேட்டார். அந்தளவுக்கு தேவிகாவுக்கு கனகா மீது பொசசிவ்னெஸ் என்று குட்டி பத்மினி தெரிவித்துள்ளார்.