எல்லாம் போச்சா.. 90 கோடி பட்ஜெட்டுக்கு இதுதான் கிடைச்சதா! தலையில் துண்டை போட்ட தயாரிப்பாளர்

Kangana Ranaut
By Parthiban.A May 27, 2022 01:30 PM GMT
Report

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் கங்கனா. ஆனால் அவர் எப்போதும் எப்போதும் கூறும் கருத்துகள் அவரை சர்ச்சையில் சிக்க வைத்துவிடும்.

அவர் முழுக்க முழுக்க ஆக்ஷன் ரோலில் நடித்த Dhaakad படம் கடந்த 20ம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்தை பல விதங்களில் கங்கனா ப்ரோமோஷன் செய்தார், ஆனாலும் மோசமான ரெஸ்பான்ஸ் தான் கிடைத்தது.

ரிலீஸ் ஆன தியேட்டர்களில் இருந்து மூன்று நாட்களில் படத்தை தூக்கிவிட்டார்கள். தற்போது வெறும் 20 தியேட்டர்களில் படம் ஓடுகிறது. மும்பையில் ஒரு தியேட்டரில் கூட அந்த படம் இல்லை.

எல்லாம் போச்சா.. 90 கோடி பட்ஜெட்டுக்கு இதுதான் கிடைச்சதா! தலையில் துண்டை போட்ட தயாரிப்பாளர் | Kangana S Dhaakad Huge Disaster

முதல் வாரத்தில் வெறும் மூன்று கோடி ருபாய் மட்டுமே படம் வசூலித்து இருக்கிறது. கிட்டத்தட்ட 90 கோடி ருபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் படுதோல்வி ஆனதால் தயாரிப்பாளர் தலையில் துண்டை போட்டிருக்கிறார்.

இந்த படத்தை வாங்க எந்த ஓடிடி நிறுவனமும் முன்வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.