உனக்கு பிறந்த கொழந்தைக்கு அப்பனா இருக்க துப்பு இல்லை.. பாரதியை கிழித்து தொங்கவிட்ட கண்ணம்மா..
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் சீரியலில் பாரதி கண்ணம்மா சீரியலும் அடங்கும். நல்லவள் போல் ரோஹித்தை திருமணம் செய்ய ஒற்றுக்கொள்ளும் வெண்பா கடைசி நேரத்தில் பாரதி தாலிக்கட்ட காத்துக்கொண்டிருக்கிறார்.
இடையில் டிஎன்ஏ டெஸ்ட்க்காக பாரதி காத்திருக்கிறார். இதற்கு பிளான் போட்ட வெண்பாவின் திட்டத்தை அறிந்து திருமண மண்டபத்திலேயே சாந்தி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டுகிறார் கண்ணம்மா.
பாரதி ஐயாவை தான் வெண்பா கல்யாணம் செய்யவுள்ளார் என்ற உண்மையை கூறிய சாந்தியால் மண்டம் உட்பட அனைவரும் ஷாக்காகியுள்ளனர்.
குடும்பத்தினர்கள் அனைவரும் கோவிலில் வர கண்ணம்மா உடனே வந்து வெண்பாவை பளார் பளார் என கன்னத்தில் அடித்துள்ளார். பின் பாரதியை கண்டபடி பேசியுள்ளார்.
தாலி கட்டிவிட்டு உன்னால் வெளியே வரமுடியுமா. விவாகரத்து செய்யாமல் இவளை கல்யாணம் செய்து கம்பி எண்ணனுமா என்று பதிலடி கொடுக்கும் விதமாக கண்ணம்மா பேசியுள்ளார்.
இதனையடுத்து உனக்கு பொறந்த கொழந்தையை பாத்துக்க துப்பு இல்லை, எவனோட கொழந்தைக்கு அப்பனா இருக்க போறியா, பெரிய தியாகியா நீ, இரண்டாம் கல்யாணம் வேறையா என்று கண்டபடி பாரதியை கேள்விமேல் கேள்வி கேட்டு சண்டை போட்டுகிறார்.
நான் தான் இதையெல்லாம் கேட்கணுமா அம்மா நீங்க கேட்க மாட்டீங்களா என்று மாமியாரையும் உசிப்பேற்றி விட்டிருக்கிறார் கண்ணம்மா.