தமிழ் சீரியல் நடிகர் என்னிடம் பார்ட்டி பண்ண கேட்டார்!! நடிகை அக்ஷிதா ஓபன் டாக்
அக்ஷிதா பூபையா
கன்னட திரைத்துறையில் இருந்து தமிழுக்கு வந்த பல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை அக்ஷிதா பூபையா. கண்ணான கண்ணே சீரியலில் முக்கிய ரோலில் நடித்து சின்னத்திரையில் நல்ல வரவேற்பை பெற்றார். தற்போது கன்னட மொழிப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சன் தொலைக்காட்சியின் ஒரு சீரியலில் நடித்த போது ஒரு நடிகர், தப்பான கண்ணோட்டத்துடன் பேசினார். ஷூட்டிங் முடிந்து பேக்கப் பண்ணும் போது அந்த நடிகர் என்னிடம் வந்து, இரட்டை அர்த்தத்தில் பேசுவார். வீக் எண்ட் என்ன பண்ணப்போறீங்கன்னு கேட்டார். வீட்டுக்கு போவேன் என்று சொல்னேன்.
அதன்பின் ஏதும் பிளான் கிடையாதா? என்று கேட்டதும், அவர் என்னுடன் பார்ட்டி பண்ணனும், சரக்கு அடிக்கணும், டான்ஸ் ஆடணும், அதன்பின் போய்ட்டே இருந்தது, அதன்பின் நானே அவரிடம் பேசுவதை கட் செய்து சென்றுவிட்டேன் என்று அக்ஷிதா வெளிப்படையாக பேசியிருக்கிறார்.