மகா நடிகை ஷோவில் ஏமாத்திட்டாங்க!! பகீர் கிளப்பும் நடிகை சோனி..
நடிகை சோனி
சோசியல் மீடியாவில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் நடிகை சோனி, பல விளம்பரங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இயக்குநர் பேரரசு வில்லனாக நடித்த செண்ட்ரல் படத்தில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். ஆனால் நடிப்பில் இன்னும் பெரிய இடத்தை பிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் பல ஆடிஷன்களில் கலந்து கொண்ட அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

அதில், சில வருடங்களுக்கு முன் ஜீ தமிழ் டிவியில் நடந்த மகா நடிகை நிகழ்ச்சிக்கான ஆடிஷனில் நானும் கலந்து கொண்டேன். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவு கொண்ட பெண்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அந்நிகழ்ச்சி பார்க்கப்பட்டது. நடிப்பு திறமை வெளிக்கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 800 பேர் அதில் தேர்வாகியப்பின் அதிலிருந்து 200 பேரை ஃபில்டர் செய்தார்கள். அதன்பின் பல கட்டங்களாக நடந்த தேர்வுகளில் கடைசியாக 50 பேரை வைத்து போட்டிகள் நடத்தி கடைசியி 15 பேரை தேர்வு செய்ததில் நானும் அதில் ஒருவர்.
மகா நடிகை
அதன்பின் 15 பேரை வைத்துதான் ப்ரோமோ சூட் நடத்த போகிறோம், நீங்கள் ராதிகா மேடம் முன் உங்களுடைய திறமையை காட்டலாம் என்று சொன்னார்கள். நாங்களும் அந்த நாளுக்காக காத்திருந்தோம். ஒவ்வொரு நாளும் போய்க் கொண்டிருப்பதை தவிர எங்களுக்கு ப்ரோமோ சூட் செய்யக் கூப்பிடவே இல்லை. நாங்கள் கால் பண்ணி கேட்டாலும் எந்த டீடெயிலும் சொல்லவில்லை. பின் பிரமோவே வந்துவிட்டது. அது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
அப்போது விசாரித்தபோதுதான் அதில் செலக்ட்டானவர்கள் எல்லோருமே சேனல் தரப்பினர்களுக்கும், ஜீ தமிழ் டிவியை சார்ந்தவர்களுக்கும் தெரிந்தவர்கள், ரெக்கமெண்ட் மூலமாகத்தான் செலக்ட்டாகி இருக்கிறார்கள் என்று தெரியவந்தது. சேனல் தரப்பினர்களுக்கு தெரிந்தவர்கள் தான் செலக்ட் செய்ய போகிறார்கள் என்றால் எதற்காக எங்களை இத்தனை முறை அலைக்கழித்தார்கள் என்று எங்களுக்கே தெரியாது என்று சோனி தெரிவித்துள்ளார்.