கோவிலுக்கு சீல்? சாமுண்டீஸ்வரிக்கு உருவாகும் காயம் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம்
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வர இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சிவவாண்டி ஏற்பாடு செய்த ஆட்கள் சாமுண்டீஸ்வரி ஊருக்குள் புகுந்து மக்களை தாக்க தொடங்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, சிவனாண்டி ஏற்பாடு செய்த ஆட்கள் சாமுண்டீஸ்வரி வீட்டு முன்பு நின்று கற்களை தூக்கி வீச சாமுண்டீஸ்வரி வெளியே வர அவரது தலையில் பட்டை ரத்தம் வடிகிறது. இதைத்தொடர்ந்து இரண்டு ஊருக்கும் இடையே மிகப்பெரிய பிரச்சனை உருவாக கார்த்திக் அதிர்ச்சி அடைகிறான். இந்த சண்டையில் பாதிக்கப்பட்டவர்களை ஹாஸ்பிடல் சென்று சந்திக்கும் கார்த்திக் பிறகு பரமேஸ்வரி பாட்டியிடம் நடந்ததை சொல்லி வருத்தப்படுகிறான்.
இது அனைத்தும் சந்திரா கலாவின் சதி வேலைதான் என தெரிந்தது கார்த்திக் செய்வதறியாது இருக்கிறான். இப்படி பிரச்சனை பெரிதாக இரண்டு ஊர்களிலும் ஊரடங்கு உத்தரவு போடப்படுகிறது. அதாவது நான்கு பேருக்கு மேல் கூறியிருக்கக்கூடாது என்ற நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.

இன்னொரு பக்கம் சந்திர கலாகும் இதுக்கெல்லாம் காரணம் கார்த்தி தான் என சாமுண்டீஸ்வரியை ஏற்றி விடுகிறாள். பிரச்சனை நாளைக்கு நாள் பெரிதாக போலீஸ் கோவிலுக்கு சீல் வைக்க முடிவெடுக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.