இயக்குனர் ஷங்கர் தான், ஆனா கதை அவருது இல்லையாம்! லீக் ஆன ரகசியம்
Shankar
RC15
Karthik Subbaraj
Ram charan
By Parthiban.A
இயக்குனர் ஷங்கர் அடுத்து சரண் சரண் ஹீரோவாக நடிக்கும் RC 15 படத்தை இயக்க போகிறார். மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் அந்த படத்தில் கியாரா அத்வானி ஹீரோயினாக நடிக்கிறார்.
இந்த படத்தின் கதையை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தான் எழுதி இருகிறார். அந்த தகவலை அவரே சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.
கொரோனா லாக்டவுன் காலகட்டத்தில் ஷங்கர் பல முக்கிய இயக்குனர்களிடம் வீடியோ காலில் பேசியதாகவும், அந்த நேரத்தில் எதாவது கதை இருந்தால் கொடுங்கள் நான் இயக்குவதற்கு என கேட்டாராம். அப்போது கார்த்திக் சுப்புராஜ் பல வருடங்களுக்கு முன்பு தான் எழுதிய ஒரு அரசியல் கதையை ஷங்கருக்கு கொடுத்து இருக்கிறார்.
அது ஷங்கருக்கு பிடித்துப்போக உடனே அதை படமாக்க முடிவெடுத்துவிட்டாராம்.